பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - பா. 7

35

கிருஷ்ணனையே பலமாகக் கொண்டவர்கள்; கிருஷ்ணனையே நாதனாகவுமுடையவர்கள்,’ என்கிறபடியே.

    அன்று தேவர் அசுரர் வாங்க-‘நம் அருள் பெற்று வென்றார் உளரோ?’ என்ன, 1துர்வாச முனிவருடைய சாபத்தின் அன்று உன் திருவருளைப் பெற்றன்றோ தேவர்கள் கடலைக் கடைந்தது? தேவர்களும் அசுரர்களும் கைவாங்கக் கடைந்தான் என்னுதல். அன்றிக்கே, வாங்குதல்-வலித்தலாய், அவர்கள் தங்களுக்கே கடையலாம்படி செய்து கொடுத்தான் என்னுதல். அலைகடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்-பெரிய அலையையுடையத்தான கடலிலே, ஒரு சித்துப் பொருளான வாசுகியைக் கயிறாகக்கொண்டு, சலிப்பிக்க ஒண்ணாதது ஒரு மலையை மத்தாக்கொண்டு, அதனை வாசுகியை இட்டுச் சுற்றிவைத்த 2நொய்ப்பம் எல்லார்க்கும் கடையலாம் இருக்கை: நமக்கும் கடையப் போம்படியாயிருக்கை. 3தாமும் ஒரு பிரயோஜனம் பெறப் பார்க்கிறராகையாலே அது தம் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிக்கிறார், ‘எந்தாய்’ என்று. கொடியேன் பருகு இன்னமுதே- 4கடைந்தனையே ஆசைப்படப் பெற்றிலேன். அன்றிக்கே, 5நீ செய்தது கொண்டு திருப்தனாக

________________________________________________________________________

1. இந்தச் சரிதப் பகுதியைக் கம்பராமயணம், பாலகாண்டம், அகலிகைப்படலத்தில் 5
  முதல் 26 முடியவுள்ள செய்யுள்களில் காண்க.

2. நொய்ப்பம்-நேர்ப்பு. ‘எல்லார்க்குரம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘நமக்கும்’
  என்று தொடங்கி.

3. ‘வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்காகச் செய்த செயலுக்குத் தோற்று,
  ‘எந்தாய்’ என்பான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தாமும்’ என்று
  தொடங்கி. என்றது, ‘அடியார்களில் ஒருவர் விரும்பிய காரியத்தைச் செய்தால்,
  மற்றையோர் விரும்பிய காரியங்களையும் செய்ய வேண்டுகையாலே, தாம்
  விரும்பிய காரியத்தையும் செய்வான் என்று அறுதியிட்டு, அவர்களுக்குச்
  செய்ததைத் தம் பேறாக நினைத்து அருளிச்செய்கிறார்’ என்றபடி.

4. ‘இன்னமுதே’ என்றதனைக் கடாட்சித்துக் கொடியேன்’ என்றதற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘கடைந்தனையே’ என்று தொடங்கி.

5. மேலதற்கே வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘நீ செய்தது’ என்று
  தொடங்கி. ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டுவா’ என்றது, தாபதவேடம் கொண்டு
  சென்ற சிவபிரான் கூற்று; சிறுத்தொண்டநாயனார் புராணம்.