பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1இவர

324

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1இவர்க்குப் பரமபதத்திலே நித்தியசூரிகளுக்கு இனியனாய் இருக்கும் இருப்போடு, உலக உருவமாக நிற்கும் நிலையோடு வாசி அறப்போக்கியமாம்படி அன்றோ இவர்க்குப் பிறந்த ஞானத்தின் தெளிவு இருக்கிறபடி? நீ நின்றவாறு-இப்படி இவை எல்லாமாய்க்கொண்டு நீ நின்ற பிரகாரம். இவை என்ன நியாயங்கள்-இவை என்ன படிகள்தாம்? 2முதல் திருவாய்மொழியிலே இவனுடைய இறைமைத் தன்மையை அனுபவித்திருக்கச்செய்தேயும், இதற்கு முன்பு கண்டறியாதாரைப் போலே புதியராய் அனுபவிக்கிறாராயிற்று. 3குணானுபவத்தில் கணந்தோறும் புதுமை பிறந்து அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாய் அனுபவிக்குமாறு போலேயாயிற்று, விபூதி அனுபவத்திலும் புதியராய் அனுபவிக்க வல்ல படி. இவை என்ன நியாயங்கள் நீ அருளாய்-இதனை அருளிச்செய்யவேணும். 4‘ஏ கிருஷ்ணனே! என் சந்தேகத்தை அடியோடு போக்குதற்கு நீதான் தக்கவன்; இந்த சந்தேகத்தை நீக்குகின்றவன் உன்னை ஒழிய வேறு ஒருவன் இலன்,’ என்கிறபடியே, அருச்சுனனுடைய சந்தேகத்தைத் தீர்த்தாற்போலே, என்னுடைய ஐயத்தையும் தீர்த்தருள வேணும். 

(1)

______________________________________________________________________________

1. ‘அழுக்குப் பதித்த உடம்பையும், ‘நீயாய்’ என்று பரஞ்சுடர் உடம்பையும் ஒக்க
  அருளிச்செய்வான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவர்க்கு’ என்று
  தொடங்கி.

2. ‘மேலே இவனுடைய விபூதி யோகத்தை அனுபவித்திருக்க, இப்போதும் முன் போலே
  ஆச்சரியப்படுவான் என்?’ என்ன, ‘முதல் திருவாய்மொழியிலே’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘முதல் திருவாய்மொழியிலே’ என்றது, உயர்வற
  உயர்நலமுடையவன் யவன்?’ என்று தொடங்கும் திருப்பதிகத்தை.

3. இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘குணானுபவத்தில்’ என்று தொடங்கி.
  ‘அப்பொழுதைக்கு அப்போது’ என்பது திருவாய் 2. 5 : 4.

4. ‘உமக்குத் தோன்றுகிற பொருத்தமில்லாத ஐயங்களை என்னால் தீர்க்கப் போமோ?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,  ‘ஏ கிருஷ்ணனே’ என்று தொடங்கி.

        ‘ஏதம் மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸி அஸேஷத;
         த்வத் அந்ய: ஸம்ஸயஸ்ய அஸ்ய சேத்தா ந்ஹ்யுபப்த்யதே’

என்பது, ஸ்ரீ கீதை, 6 : 39.