பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

எட்டாந்திருவாய்மொழி - பா. 1

323

செயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி. மதுசூதா - ஆச்சரியமான செயல்களுக்கு எல்லாம் ஸ்ரீ வாமனனைப் போலேயாயிற்று, பகைவர்களை அழிப்பதற்கு மதுசூதனன் என்கிறது. மதுசூதா நீ அருளாய் - 1மது என்னும் அசுரனை அழித்தாற்போலே, எனக்கு ஓடுகிற ஐயத்தையும் நீயே போக்கித்தந்தருள வேணும். தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் - 2காரியத்தைப்பற்றி இருக்கிற விசித்திரத் தன்மை காரணத்திலேயும் உண்டாய் இருக்கும் அன்றோ? 3மேலும், ஒன்றின் படியாய் இராதே அன்றோ மற்றையது? இப்படி வேறுபட்ட பிரகாரங்களையுடையனவான ஐம்பெரும்பூதங்களுக்கும் நிர்வாஹகனாய். தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் - 4காரியவர்க்கத்திலும் தாய் செய்தது தமப்பன் செய்யமாட்டான்; தமப்பன் செய்யும் உபகாரங்கள் மக்கள் செய்யமாட்டார்கள்; மக்கள் செய்யும் உபகாரம் உறவினர்கள் செய்யமாட்டார்கள்; இப்படி எல்லாவிதமான உறவினர்களுமாய். முற்றுமாய் - சொல்லப்படாத தொடர்பு பெற்றவைகளாயுள்ள சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும் நிர்வாஹகன் ஆனவனே!

    நீயாய் - 5உலக உருவமாய் இருக்கும் அளவு அன்றே தனக்கே உரியதான விக்கிரகத்தோடு கூடி இருக்கும் இருப்பு?

______________________________________________________________________________

1. விரோதி அழித்தலைக் கூறுதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘மது என்னும்’ என்று
  தொடங்கி.

2. ‘ஒரு தன்மையதான காரணத்திலே விசித்திரம் ஏது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘காரியத்தைப் பற்றி’ என்று தொடங்கி. என்றது, ‘காரியம் விசித்திரமான
  போதே காரணமும் அதற்குத் தகுதியாய் இருக்க வேண்டும் என்பது அநுமானத்தால்
  சித்திக்கும்’ என்றபடி.

3. மேலதற்கே வேறும் ஒரு பரிகாரம் அருளிச்செய்கிறார், ‘மேலும்’ என்று தொடங்கி.
  என்றது, ‘காரணங்கள் பரஸ்பரம் விசித்திரங்கள்’ என்றபடி.

4. காரியவர்க்கத்திலும் விசித்திரமான தன்மையை அருளிச்செய்கிறார், ‘காரியவர்க்கத்திலும்’
  என்று தொடங்கி. என்றது, ‘ஒருவனே எல்லாவிதமான உறவு ஆகிறதும் ஆச்சரியம்’
  என்றபடி.

5. ‘நீயாய்’ என்பதற்கு ‘அசாதாரண விக்கிரகத்தோடு கூடியவன்’ என்று பொருள்
  அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி, ‘இதிலே ஆச்சரியம் யாது?’ என்னும் சங்கைக்குப்
  பரிகாரம் அருளிச்செய்கிறார், ‘உலக உருவமாக’ என்று தொடங்கி.