பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பட

322

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பட்டாற்போலே, இவரும் அவனுடைய விசித்திரமான உலக உருவமாய் இருக்குந்தன்மையை அருளிச்செய்து ஆச்சரியமடைந்தவராகிறார். 

                      740

        மாயா! வாமன னே!மது சூதா! நீ அருளாய்
        தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
        தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
        நீயாய் நீநின்ற வாறுஇவை என்ன நியாயங்களே!

   
பொ-ரை : மாயவனே! வாமனனே! மதுசூதனனே! தீயாகி நீராகி நிலனாகி ஆகாசமாகிக் காற்றாகித் தாயாகித் தந்தையாகி மக்களாகி மற்றைய உறவினர்களாகி மேலும் சொல்லப்படாத பொருள்களுமாகி உனது உருவுமாகி நீ நின்றபடிகள் தாம் இவை என்ன படிகள்?

    இத்திருவாய்மொழி, கலைநிலைத்துறை.

   
ஈடு : முதற்பாட்டு. 1விசித்திரமான காரிய காரணங்களை எல்லாம் விபூதியாகவுடையனாய் இருக்கிற இருப்பை அநுசந்தித்து, ‘இவை என்ன படிகள்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

    மாயா - ‘மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது. வாமனனே - 2‘மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது, 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்யவேண்டும்படி வார்த்தை அருளிச்செய்து, சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்துகொண்டு, இப்படிச்செயத

______________________________________________________________

நோக்கு. ‘நல்குரவும், செல்வும்’ என்ற திருவாய்மொழி மாறுபட்ட
ஐஸ்வர்யத்திலே நோக்கு. இத்திருவாய்மொழி ஆச்சரியமாக உலக உருவமாய்
இருக்குந்தன்மையிலே நோக்கு.

1. பின் மூன்று அடிகளைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. மாயன் - ஆச்சரியத்தையுடையவன். ‘வாமனன்’ என்ற பதம்,
  ‘ஆச்சரியத்தினை அறிதற்கு இடமாய் இருக்கிறது என்றபடி.’

3. 'வாமனன் இடத்தில் ஆச்சரியம் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அன்றே பிறந்து’ என்று தொடங்கி. ‘அன்றே’ என்பது,
  பெரியதிருவந்தாதி. முன்னோட்டுக் கொண்ட - மேலே எண்ணிக்கொண்ட.