ஒன
எட்டாந்திருவாய்மொழி - முன்னுரை |
321 |
ஒன்றிலே
கோத்திட்டு வைக்குமாறு
போலே, முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து, ‘எனக்கு இதில்
பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச்சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக்கொடு
போருகிற இவ்வாச்சரியத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க, வேறே சிலவற்றைச்
சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது? இவ்வளவு அல்லாத நம்முடைய
விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று தன்னுடைய ஆச்சரியமான உலக
உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக்கொடுத்தான். அங்ஙனம் காட்டிக்கொடுத்த 1அதுதானும்
இவர் நினைத்தது அன்றேயாகிலும், அவன் காட்டிக்கொடுத்தது ஆகையாலே. அதுவும் இவருடைய பிரீதிக்குக்
காரணமாக இருக்கும் அன்றோ? ஆக, இவர் ஒன்றைக் கேட்க, அவன் பல ஆச்சரியங்களைக் காட்டிப்
பரிகரித்தான்.
2அக்குரூரன்,
யமுனையிலே புக்கு முழுகினவாறே பிள்ளைகளை நீருக்குள்ளே கண்டு அஞ்சிக் கரையிலே பார்த்தான்: அங்கேயும்
கண்டான்; கண்டு, 3‘ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்துமாவான எவனுடைய மிகப்பெரிய
ஆச்சரிய சொரூபமாயிருக்கிறதோ, அப்படிப்பட்ட மிகப்பெரிய ஆச்சரியச் செயலையுடைய உன்னோடு சேர்ந்தேன்,’
என்று கொண்டு அவன் ஆச்சரியப்
______________________________________________________________________________
1. ‘இவர் விரும்பாதனவற்றை
அவன் காட்டினாலும், இவர் மனம் நிறைவு பெற்றது
ஆகுமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அதுதானும்’ என்று தொடங்கி.
2. உலக உருவமாய் இருக்குந்தன்மை
ஆச்சரியம் என்னுமதற்கு உதாரணம் காட்டுகிறார்,
‘அக்குரூரன்’ என்று தொடங்கி. இங்கே,
‘நீரிற் புகுங்கண்டு
தேரினைப் பார்க்கும் நிறுத்தியபொன்
தேரில் தொழும்பின்னை
நீரினில் காணும் சிறந்தபச்சைக்
காரில் திறம்மெய்
யரங்கனும் சேடனும் கஞ்சவஞ்சன்
ஊரிற் செலஉடன்
போம்அக்கு ரூரன்தன் உண்மகிழ்ந்தே.’
என்ற திருவரங்கத்துமாலைச்
செய்யுள் நினைத்தல் தகும்.
3. ‘ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம்
ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண
அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 :
7.
‘புகழும்நல்
ஒருவன்’ என்ற திருவாய்மொழியும், ‘நல்குரவும் செல்வும்’ என்ற
திருவாய்மொழியும், இத்திருவாய்மொழியும்
பொதுவாக நோக்க ஒன்றாக
இருந்தனவேயாகிலும் ஒவ்வொன்றற்கும் வேறுபாடு சிறிது உண்டு என்க.
‘புகழும் நல்
ஒருவன்’ என்ற திருவாய்மொழி ஐயத்திலே
|