பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

எட

எட்டாந்திருவாய்மொழி-‘மாயா’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழி, உருவு வெளிப்பாடாய்ச் சென்றது. 2கைக்கு எட்டாமையாலே உருவு வெளிப்பாடு என்று அறிவர் அன்றோ? 3இனி. சர்வேஸ்வரன் தான் நினைத்த காரியம் செய்து தலைக்கட்டிக்கொள்ளுமளவும் நம்மை இங்கே வைத்திருப்பான் என்னும் இடமும் அறிவரன்றோ? ஆகிலும், அவனை ஒழியத் தரிக்க மாட்டாதவர் ஆகையாலே, இதனை நினைத்து ஆறி இருக்கவுதம் மாட்டாரே! 4‘விரோதியைப் போக்கித் தரவேணும்’ என்று இவர் விரும்பினாலும், அவனும் இவரைக்கொண்டு தான் நினைத்த பிரபந்தங்களைத் தலைக்கட்டிக்கொள்ளாமளவும் இவர் விரும்பியதைச் செய்யானே! 5இவர் விரும்பியதைச் செய்யாதிருக்கச்செய்தேயும், இவரை இங்கே வைத்து வாழ்விக்கும் உபாயங்களும் அறிந்திருக்குமே! 6ஆகையாலே, சில பொருள்களை உயிர் போகாதபடி

______________________________________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்கிறார், ‘மேல்
  திருவாய்மொழி’ என்று தொடங்கி.

2. ‘உருவு வெளிப்பாடு என்று அறியும்படி என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘கைக்கு எட்டாமையாலே’ என்று தொடங்கி.

3. ‘இவர்தம்மைச் சர்வேஸ்வரன் இங்கே வைத்திருப்பதற்குரிய காரியத்தை இவர்தாம்
  அறிந்திருக்க, விரைவதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘இனி, சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி.

4. ‘‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று வேண்டிய போதே விரோதியைப்
  போக்காதிருப்பான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘விரோதியை’
  என்று தொடங்கி.

5. ‘இவர் விரும்பியதனை அவன் செய்யாவிட்டால் இவர் முடியாரோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இவர் விரும்பியதை’ என்று தொடங்கி.

6. ‘மேலே கூறியவற்றை எல்லாம் முடித்துக் காட்டுதல் முன்னாக, ஆச்சரியம் இருந்தபடி
  என்?’ என்று கேட்கும் பிரகாரத்தை அருளிச்செய்கிறார், ‘ஆகையாலே’ என்று
  தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகிற ‘பாசங்கள் நீக்கி’ என்னும் திருப்பாசுரத்தைத்
  திருவுள்ளம் பற்றி, ‘ஆகையாலே’ என்றது முதல் ‘அருளிச்செய்யவேணும்’ என்றது
  முடிய அருளிச்செய்கிறார், ‘சில பொருள்கள்’ என்றது, மீன் முதலாயினவற்றை.