ம
எட்டாந்திருவாய்மொழி -
பா. 11 |
341 |
மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-அவனுக்குத் தகுதியாம்படி ஆழ்வார்
அருளிச்செய்த. ‘அறிவது அரிய அரியை’ என்றதாகில், ‘ஆம் வண்ணத்தால் உரைக்கையாவது என்? முரண்
அன்றோ?’ என்னில், ‘அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது, 1‘அவன் மயர்வற
மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’
என்றது, அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ? 2‘நெறிவாசல்
தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க்கதவம் சார்த்தி அறிவானாம்’ என்று ஆக்ஷேபிப்பது,
தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?
ஆம் வண்ணம் ஒண்
தமிழ்கள் - ‘அவனுக்குத் தகுதியாம்படி இருக்கிற அழகிய தமிழ்’ என்னுதல்; ‘தகுதியாக இருக்கிற
பாசுரங்களையுடைத்தாய், சர்வாதிகாரமாகிற நன்மையையுடைத்தான தமிழ்’ என்னுதல். வண்ணம் - பா.
அன்றிக்கே, வண்ணம் என்று ஓசையாய், ‘நல்ல ஓசையையுடைய செந்தமிழ்’ என்னுதல். தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும் - தமிழாக இருந்துள்ள இவை ஆயிரத்துள் இப்பத்தையும். ஆம் வண்ணத்தால்
உரைப்பார் - ‘பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப்பெற்று அவனுக்குத்
தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில், அத்தேவை எல்லாம் ஆழ்வார்தம்மோடே; இவர்களுக்குத்
தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும். அமைந்தார்தமக்கு என்றைக்கும் - அவர்களுக்கு இவ்வாத்துமா
உள்ளதனையும், 3ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா; ஆழ்வார்
______________________________________________________________________________
1. ‘ஆம் வண்ணத்தால் அறிந்துரைத்தா
ரேயானால், ‘அறிவது அரிய’ என்பான் என்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறால், ‘அவன் மய்ரவற’
என்று தொடங்கி.
2. தன் முயற்சியால் அறியப்போகாமைக்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘நெறிவாசல்’ என்று
தொடங்கி. இது, நான்முகன் திருவந்தாதி.
3. ‘ஈஸ்வரன்
முழங்கைத் தண்ணீர் வேண்டா’ என்றது, ஈஸ்வரனாகிய முழங்கைத் தண்ணீர்
வேண்டா; என்றபடி. முழங்கைத்தண்ணீராவது,
ஒருவன் தண்ணீர் குடித்தால் அவன்
முழங்கையிலே ஒழுகுகிற தண்ணீரைக் குடித்தல்.
|