பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 2

355

விருது பிடிக்கப் பண்ணினாற்போலே, தானே பிரபந்தத்தைச் செய்து, நான் செய்தேன் என்று என் தலையிலே ஏறிட்டு எனக்கு ஒரு பிரசித்தியைத் தந்தான்.

    1
தானே காரியம் செய்து பிறர் தலையிலே ஏறிடுதல் அவனுக்குப் பண்டே சுபாவங் கண்டீர்! ‘எந்த ஸ்ரீமந் நாராயணன் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தான்? எவன் அவனுக்கு வேதங்களையும் உபதேசம் செய்தான்?’ என்பது உபநிடதம். ‘அளவிட முடியாத ஆற்றலையுடையவனும் பூசிக்கத் தக்கவனுமான சிவனுக்கு விஷ்ணு அந்தராத்துமாவாய் இருக்கிறார்; அப்படி விஷ்ணு சிவனுக்கு அந்தராத்துமாவாய் இருப்பதனாலே அந்தச் சிவன் வில்லை வளைத்து நாண் ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தைப் பொறுத்துக்கொண்டான்’ என்பது பாரதம். 2‘இப்போது தானே நடத்திக்கொண்டது என்?’ என்றால், தன் உருவமாக இருந்து காரியம் செய்யுமாறு போலே, பிரமன் சிவன் முதலானோர்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து அவர்கள்மேல் ஏறிட்டாறைபோலே கண்டீர், என்மேலே ஏறிட்டுக் கவிபாடினேன் நானாகச் சொல்லித் தலைக்கட்டினபடியும்,’ என்கைக்காகச் சொல்லிற்று.

(2)

______________________________________________________________________________

1. பிரமனுக்கு வேதத்தைக் கொடுத்ததும், முப்புரங்களை அழித்ததும் சர்வேஸ்வரனே
  என்பதற்குப் பிரமாணம் காட்டுவதற்குத் திருவுள்ளம் பற்றி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘தானே காரியம் செய்து’ என்று தொடங்கி. பிரமாணங்களைக்
  காட்டுகிறார், ‘எந்த’ என்று தொடங்கியும், ‘அளவிட முடியாத’ என்று தொடங்கியும்.

        ‘யோபிரஹ்மாணம் வி்ததாதி பூர்வம் யோவை
         வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை’

என்பது, ஸ்வேதாஸ்வதரம்.

       
‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
         தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:’

என்பது, பாரதம், கர்ணபர்வம்.

2. ‘‘மூவுருவாம் முதல்வன்’ என்று தன் செயலுக்குக் காரணம் என்பான் என்?’ என்ன, தான்
  செய்த காரியம் தன் அதீனமானாற்போலே இவர்கள் காரியமும் தன் அதீனம்
  என்கைக்காகச் சொல்லுகிறது என்கிறார் ‘இப்போது தானே’ என்று தொடங்கி.