பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

354

திருவாய்மொழி - ஏழாம் பத்து

தான் தன்னைக் கவி பாடானானாகில், நீர் கவி பாடினீர் என்று நாட்டிலே பிரசித்தமாக்கினபடி எங்ஙனே?’ என்னில், மாயன் - சொல்ல வேணுமோ? ஆச்சரியமான சத்தியோடு கூடினவன் அன்றோ?

    1
என்னைக் கருவி்யாகக் கொண்டு தானே கவி பாடினான்.  ‘உம்மைக் கருவியாகக் கொண்டு கவி பாடினபடி எங்ஙனே?’ என்ன, என் முன் சொல்லும் - அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன். 2தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ? 3நம்பி திருவழுதிநாடு தாசர், ‘ஸ்ரீகீதை போவான் ஒருவன் சந்தியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்துவிடு மத்தனைபோக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பன் செய்வான் சென்றால், சர்வேஸ்வரனும் கிராமத்திலுள்ளாரும் புறப்பட்டு எதிர்கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியாநிற்பார்கள்,’ என்று அருளச்செய்வர். 4‘அதுதான் என் போல?’ என்றால், ‘மூவுருவாம் முதல்வனே-பிரமனைப் படைத்து அவனை அத்தியயனம் செய்வித்தித் தேவர்களுக்கு வெளிச்சிறப்பைச் செய்வித்து அது தன்னைப் ‘பிரமன் செய்தான்,’ என்று அவன் தலையில் ஏறிட்டும், 5சிவனுக்கு அந்தராத்துமாவாய்ப் புக்கு நின்று முப்புரங்களை எரிவித்துச் ‘சிவன் செய்தான்’ என்று அவன் தலையிலே ஏறிட்டும்

______________________________________________________________________________

1. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘என்னை’ என்று தொடங்கி.

2. ‘இவரைக் கொண்டு சொல்ல வேண்டுமோ? தானே சொல்ல ஒண்ணாதோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தான் சொன்னானாகில்’ என்று தொடங்கி.
  வறமுறுகல்-கருகிப்போதல்.

3. ஸ்ரீகீதைக்கும் திருவாய்மொழிக்கும் உள்ள வாசியை ஆப்த சம்வாதத்தாலே விளக்குகிறார்,
  ‘நம்பி திருவழுதிநாடு தாஸர்’ என்று தொடங்கி. சந்தியா சதஸ்ஸூ-ஊர்ப் பொதுச்சாவடி.

4. ‘அதுதான் என் போல என்றால்’ என்றது, ‘தான் கவி பாடி ஆழ்வார் மேலே
  ஏறிடுகிறதுதான் என்போலே என்றால்’ என்றபடி.

5. ‘‘பணிவில்சீர்ச்,
   செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
   கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
   தொல்புகழ் தந்தாரும் தாம்.’’

என்பது, பரிபாடல்.