1இன
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 2 |
353 |
1இனி, சேதனனுக்குத் தனித்து
ஒரு காரியத்தைச் செய்தலுக்கும் செய்யாமைக்கும் யோக்கியதை இல்லை அன்றோ, சொரூபம் ஸ்திதி
முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே? 2இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம்
ஆக்கினான். 3‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்’ என்கிறபடியே.
4தான் வென்று மற்றையாரோடு ஒருசேர நின்று அருச்சுனனைப் புகழுமாறு போலே. 5‘செங்கண்
அலவலை’ - ‘உரையாடதவன் விருப்பமற்றவன்’ என்று இருக்கக்கூடிய அவன், அது முழுதும் அழிந்து ஏத்தத்
தொடங்கினான் ஆயிற்று. 6‘இன்கவி என்பித்து’ என்னா நின்றீர்; இங்ஙன் அன்றோ?’
என்னில், அன்று; ‘பின்னைச் செய்தபடி என்?’ என்னில், தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த
- சொல்லும் தன்னது: சொன்னவனும் தான்; சொல்லிற்றும் தன்னை. 7கவிபாட்டுண்டேன்
நானாகில் அன்றோ கவிபாடினேன் நானாவது?
______________________________________________________________________________
1. ‘சொன்னவர் நீர் அல்லீரோ?’
என்ன, ‘இனி’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
‘சொரூபம்’ என்று
தொடங்கி.
2. ‘இன் கவி என்பித்து’ என்றதற்குப்
பதப்பொருள் அருளிச்செய்கிறார், ‘இதனை’ என்று
தொடங்கி.
3. நாட்டிலே பிரசித்தமாக்கினமைக்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘பாலேய்’ என்று தொடங்கி.
4. தானே செய்து வேறு
ஒருவர் பக்கலிலே பிரசித்தமாக்கினதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘தான் வென்று’ என்று
தொடங்கி.
5. தானே வென்று அவனைப்
புகழ்ந்தமைக்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘செங்கண்
அலவலை’ என்று.
‘மலைபுரைதோள் மன்னவரும்
மாரதரும் மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்
பட்டழியப் பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்
முன்நின்ற செங்கண்
அலவலைவந்து அப்பூச்சி
காட்டு கின்றான்;
அம்மனே அப்பூச்சி
காட்டு கின்றான்.’
என்பது, பெரியாழ்வார் திருமொழி.
அலவலை-பலவாறாகப் பேசுகின்றவன். ‘அலவலை’
என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘உரையாடாதவன்’
என்று தொடங்கி.
‘அவாக்யநாதர:’ என்பது, சாந்தோக். உப. 3 : 14.
6. பொதுவான சங்கையை எழுப்புகிறார்,
‘இன்கவி’ என்று தொடங்கி.
7. ‘என்சொல்லால் யான்
சொன்ன’ என்றதற்கு மறுதலையாக, தன் சொல்லால் தான்
கீர்த்தித்த
என்னாமல், ‘தன்னை’ என்று
விசேடிக்கிறது என்?’ என்ன,
‘திருஷ்டாந்தத்திற்காக,’ என்கிறார். ‘கவி பாட்டுண்டேன்’ என்று
தொடங்கி. கவி
பாட்டுண்கை-கவிக்கு விஷயமாகை.
|