பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உள

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 6

361

உள்ளார் அனைவரும் தன்னைப் பரவும்படி இனிய கவிகளைப் பாடினான். என்றது, ‘விசேஷஜ்ஞர், விசேஷஜ்ஞர் அல்லாதார் என்னும் வேற்றுமை இன்றியே எல்லாரும் கொண்டாடும்படி செய்தான்,’ என்றபடி. பரமரே - 1‘அவனோடு ஒத்தவர் இல்லை’ என்கிற வாக்கியம்கொண்டு இவனுடைய உயர்வு அறியவேண்டா; என்னை இடுவித்துக் கவி பாடுவித்துக்கொண்ட இதுவே போரும் அவனுடைய உயர்வு அறிகைக்கு.

(5)

                   756

        இன்கவி பாடும் பரம கவிகளால்
        தன்கவி தான்தன்னைப் பாடுவி யாதுஇன்று
        நன்குவந்து என்னுடன் ஆக்கிஎன் னால்தன்னை
        வன்கவி பாடும்என் வைகுந்த நாதனே.

   
பொ - ரை : ‘இனிய கவிகளைப் பாடுகிற உயர்ந்த புலவர்களால் தனக்குத் தகுதியான கவிகளைத் தான் தன்னைப் பாடுவித்துக் கொள்ளாமல். என் வைகுந்தநாதன், இன்று வந்து, என்னைத் தன்னோடு ஒத்தவன் ஆக்கி, என்னால் தன்னைச் சொற்செறிவு பொருட்செறிவுள்ள கவிகளை நன்றாகப் பாடாநின்றான்,’ என்கிறார்.

    வி-கு :
‘என் வைகுந்தநாதன், பரம கவிகளால் தன்னைப் பாடு வியாது, இன்று வந்து என் உடன் ஆக்கி. என்னால் தன்னை வன்கவி நன்குபாடும்,’ என்க.

    ஈடு : ஆறாம் பாட்டு. 2‘வியாசர் பராசரர் வால்மீகி முதலான கவிகளைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாமல், என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடுவதே!’ என்று பிரீதியையுடையராகிறார்.

    இன் கவி பாடும் பரம கவிகளால். . .என்னால் தன்னை வன்கவி பாடும் -‘பின்னைத் தான் தனக்குச் சில கவிகளைப் பாடவேண்டினால், அதற்குத் தகுதியாக இருப்பார் ஸ்ரீ வேதவியாசபகவான். ஸ்ரீ பராசரபகவான், ஸ்ரீ வால்மீகி பகவான் இவர்கள் உளராய் இருக்க. மற்றும்

_____________________________________________________________

1. ‘நதத் ஸமஸ்ச’ என்பது, ச்வேதா. உப. பரமன்-சர்வாதிகள்.

2. திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.