பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

362

திருவாய்மொழி - ஏழாம் பத்து

வேணுமாகில், ‘செந்தமிழ் பாடுவார்’ என்று சொல்லப்படுகிற முதல் ஆழ்வார்கள் எல்லாரும் உளராய் இருக்க, என்னைக்கொண்டு கவி பாடுவித்துக்கொண்ட இதுவும் ஒரு நீர்மையே!’ என்கிறார். 1முதல் ஆழ்வார்களிலே ஒருவரை ‘ஒரு கவி சொல்லிக் காணீர்’ என்ன, ‘பெருகு மதவேழம்.. . . . . . . . வான்கலந்த வண்ணன் வரை’ என்றே அன்றோ அவர் பாடுவது? 2‘பெருகு மத வேழம் - ஆற்றுப் பெருக்குப்போலே பெருகாநின்றுள்ள மதத்தையுடைய யானையானது, மாப்பிடிக்கு முன் நின்று - 3மதித்து முன்னடி தோற்றாதே வருகிற இதனையும் தனக்குக் கையாள் ஆக்கிக்கொள்ளவற்றாய் ஆயிற்று இதனுடைய சீர்மை இருக்கிறபடி. ‘நான் இங்குத்தைக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று ஏவிற்றுச் செய்கைக்குக் காலத்தை எதிர் நோக்கி நிற்கின்றதாதலின், ‘முன்னின்று’ என்கிறது. இரு கண் இள மூங்கில் வாங்கி - இரண்டு கண்ணேறி அதற்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இருக்கிற மூங்கிற்குருத்தை வாங்கி; என்றது, தான் மதித்து முன்னடி தோற்றாதே திரியச்செய்தேயும் பிடியின் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே குறிக்கோளோடே ஆதாரத்தோடு வாங்குதலைத்தெரிவித்தபடி. அருகு இருந்த தேன் கலந்து - 4திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே, அருகே மலை முழைஞ்சுகளிலே நிரம்பியிருக்கிற தேன்களிலே வாங்கித் தோய்த்து. 5மூங்கிற்குருத்தையும் நீர்ப்பண்டத்தைப்

______________________________________________________________________________

1. முதலாழ்வார்கள் கவி இனிதாய் இருக்கும் என்பதற்குப் பிரமாணம் காட்டத் திருவுள்ளம்
  பற்றி, அதற்குச் சங்கதி அருளிச்செய்கிறார் ‘முதலாழ்வார்களிலே’ என்று தொடங்கி.

2. பிரமாணமாக எடுத்த திருப்பாசுரத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘பெருகு
  மதவேழம்’ என்று தொடங்கி.

3. ‘மாப்பிடிக்கு’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘மதித்து’ என்று தொடங்கி.

4. ‘திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே’ என்றது, ‘திருமஞ்சனம்
  கொண்டருளுகைக்குக் கலசங்கள் பூரித்திருக்குமாறு போலே’ என்றபடி.

5. தோய்த்து என்னாமல், ‘கலந்து’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘மூங்கிற்குறுத்தையும்’ என்று தொடங்கி.