பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 6

363

போன்றதாக அருளிச்செய்கிறார். நீட்டும் - 1இதுதான் இரந்து கொடாநிற்க, அதனை, அது ‘உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்’ என்று நிற்குமாயிற்று. வான் கலந்த வண்ணன் வரை - 2மூங்கிற்குருத்தும் தேனும் கலந்தாற்போலே ஆயிற்று, மேகமும் அவன் திருநிறமும் கலந்திருக்கும்படி.

    தன் கவி தான் தன்னைப் பாடுவியாது - 3கவியும் தன்னது; பாடினாலும் தான்; கவிகட்குப் பொருளாயுள்ளவனும் தான். அவர்களைக் கொண்டு, தன்னுடையதான சொல்லாலே, அதற்குப் பொருளாயுள்ள தான் தன்னைப் பாடுவியாதே. இன்று நன்கு வந்து - இன்று நான் இங்ஙனே உஜ்ஜீவிக்கும்படிக்குத் தகுதியாக வந்து. அன்றிக்கே, ‘நான் உவந்து’ என்று பிரித்து, ‘நன்றாக உவந்து’ என்றும், ‘இக்கவி பாடுகைதானே பிரயோஜனமாக உவந்து’ என்றும் பொருள் கூறலுமாம். என் 4உடன் ஆக்கி - என்னைப் பிரியாத கருவியாகக் கொண்டு. வன்கவி பாடும் - சொற்செறிவு இன்றி இருக்கை அன்றிக்கே, 5‘மொய்ய சொல்லால்’ என்கிறபடியே, சொற்செறிவையுடைத்தாய் இருக்கை, என் வைகுந்தநாதனே - அழியாததான கலங்காப் பெருநகரத்தை இருப்பிடமாகவுடையோமாய் இருப்

______________________________________________________________________________

1. கொடுக்கும் என்னாமல் ‘நீட்டும்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இதுதான்’
  என்று தொடங்கி.

2. ‘தேன் கலந்து’ என்றும், ‘வான் கலந்த’ என்றும் வந்துள்ள சொற்களைத் திருவுள்ளம்
  பற்றி அருளிச்செய்கிறார், ‘மூங்கிற்குருத்தும்’ என்று தொடங்கி.

3. ‘தன் கவி, தான், தன்னை’ என்ற மூன்றுக்கும் வேற்றுமையை அருளிச்செய்கிறார்.
  ‘கவியும்’ என்று தொடங்கி. இதனை விவரணம் செய்கிறார், ‘அவர்களைக் கொண்டு’
  என்று தொடங்கி.

4. உடன் - பிரியாத கருவி.

5. ‘மொய்ய சொல்லால்’ - இது, திருவாய். 4. 5 : 2. இது, சொற் செறிவையுடைத்தாய்
  இருப்பதற்கு மேற்கோள்.

6. ‘வைகுந்தநாதன்’ என்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘அழியாததான’ என்று தொடங்கி.

        ‘சேரா தனஉள வோபெருஞ் செல்வர்க்கு வேதம்செப்பும்
        பேரா யிரம்திண் பெரும்புய மாயிரம் பெய்துளவத்
        தாரார் முடியா யிரம்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
        ஆரா வமுதக் கவியா யிரம்அவ் வரியினுக்கே.’

என்பது, சடகோபரந்தாதி, 45.