பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஆத

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 7

367

ஆத்தும வஸ்து நித்தியமாக இருக்கச்செய்தே 1‘அவன் இல்லாதவனாகவே ஆகிறான்’ என்றும், ‘இவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்’ என்றும் சொல்லாநிற்பதைப் போன்றது ஆயிற்று. 2‘இன்னான் வாக்காலே கவி பாடின பின்பு அவன் வாழ்ந்தான்’ என்னக் கடவது அன்றோ? அப்படியே, புகழ்ந்த பின்பு தனக்கு அவ்விபூதியில் இருப்பு உண்டாயிற்றதாக நினைத்து இராநின்றான் அவன்.

    வண் தீம் கவி செய் குந்தன் - வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி, அதுத்தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது, 3‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக்கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று. 5சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ? ‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் -

___________________________________________________________________________

1. ‘அஸந்நேவ ஸபவதி அஸ்த்ப்ரஹ்மேதி வேதசேத்
  அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோவிது:’

என்பது, தைத்திரீயம்.

2. ‘அப்படி ஒருவன் கவி பாடினால் அதனால் மேன்மை உளதாமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இன்னான்’ என்று தொடங்கி.

        . . . . . . . . . . . . . . . . . . . . . .‘தாழாது,
        செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
        வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
        இன்றுள னாயின் நன்றுமன் என்றநின்
        ஆடுகொள் வரிசைக் கொப்பப்
        பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே’
        ‘ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
        மாங்குடி மருதன் தலைவ னாக
        உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
        புலவர் பாடாது வரைகஎன் நிலவரை’

என்பன புறநானூறு, 53, 72.

3. ‘தன்பேறாக நினைத்திருக்கும்’ என மேலே அருளிச்செய்ததனை விவரணம் செய்கிறார்,
  ‘துயர் அற’ என்று தொடங்கி.

4. தன் துயர் தீர்ந்ததனுடைய உறைப்பை அருளிச்செய்கிறார், ‘இவர் துயர்’ என்று
  தொடங்கி.

5. ‘தன்னதானபடி ஆமாறு யாங்ஙனம்?’ என்ன, ‘சரீரத்துக்கு’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். இதற்கு அநுஷ்டானமும் காட்டுகிறார், ‘வ்யஸநேஷூ
  மநுஷ்யாணாம்’ என்று தொடங்கி. ‘மநுஷ்யாணாம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘திவ்விய’ என்று தொடங்கி.