பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

368

திருவாய்மொழி - ஏழாம் பத்து

திவ்விய அந்தப் புரத்திலுள்ளர்க்காதல் திருத்தாய்மார்க்காதல் ஒரு துன்பம் வந்தாலோ துக்கத்தையுடையவராவது? என்றால், மநுஷ்யாணாம் ப்ருஸம் துக்கிதோ பவதி - துக்கத்தையுடையவனான அளவன்றிக்கே, யானை அளறுப்பட்டாற்போலே நோவுபடுவார் ஆயிற்று, இன்று ஒரு படியாய், பிற்றை நாள் ஒரு படியாய், பின்னர் ஆறிப் போம் இவர்களுக்கு; இவர்கள் துக்கத்தில் நாள்தோறும் புதியராய் இருப்பர் ஆதலின். ‘துக்கிதோ பவதி’ என்கிறது. 1‘வியஸநம் இவனதானால் துக்கமும் இவனதாகவேண்டி இருக்க, இவர் துக்கத்தையுடையர் ஆதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இவன் படுகிற கிலேசம் இவன் காவற்சோர்வால் வந்தது ஒன்று அன்றே, நம் காவற்சோர்வாலே வந்தது ஒன்று அன்றோ?’ என்று காவலர் ஆகையாலே நாள்தோறும் புதியராய் இருப்பர் என்க. 2‘இது எனக்கு மிகவும் நாணமாய் இருக்கின்றது; நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்,’ என்னுமவர் அன்றோ? இவன்

______________________________________________________________________________ 

      ‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
       உத்ஸவேஷூ ச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி’

என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 2 : 40.

     
சுலோகத்திலே உள்ள ‘ப்ருஸம்’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘துக்கத்தையுடையனான’ என்று தொடங்கி. அளறுபடுதல் - சேற்றிலே அகப்படுதல்.
  ‘பவதி’ என்ற நிகழ்காலத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இன்று ஒரு படியாய்’
  என்று தொடங்கி.

1. வியசனம் இவனது ஆனால் பெருமாள் துக்கத்தை அடைவதற்குரிய காரணத்தை வினா
  விடை மூலமாக அருளிச்செய்கிறார், ‘வியசனம்’ என்று தொடங்கி.

        ‘மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
         தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
         ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
         ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ?’

(பெரிய புராணம், திருநகரச் சிறப்பு, 36.)

2. ‘நோவுபட்டிருப்பர்’ என்பற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘இது எனக்கு’ என்று தொடங்கி.

        ‘ப்ரஸீதந்து பவந்த: மே ஹ்ரீ: ஏஷாஹி ம்ம அதுலா
         யத் ஈத்ருஸை: அஹம் விப்ரை: உபஸ்த்தேயை: உபஸ்தித:’

என்பது, ஸ்ரீ ராமா. ஆரண். 10 : 10.

     
இச்சுலோகத்திலுள்ள ‘அதுலா’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இவன்
  அளவு’ என்று தொடங்கி.