பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஆழ

370

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    ஆழி அம் கை எம் பிரான் புகழ் பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வனோ - ஆழி அம் கை எம்பிரான் புகழைப் பாரிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் நீரிலே உள்ளாரும் பாதாள உலகத்திலுள்ளாரும் மற்றும் எல்லாரும் கலந்து பருகிலும் நான் ஆர்வனோ? 1தன்னுடைய சொரூப ரூப குண விபூதிகளை என்னுடைய கவிக்கு விஷயமாக்கின மஹோபகாரகனுடைய புகழை. 2‘வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்; ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன்,’ என்றார் அன்றோ? அன்றிக்கே, 3‘பாரிலுள்ளார், விண்ணிலுள்ளார், நீரிலுள்ளாரான இவர்கள் எல்லாருடைய வாக்கு முதலான கருவிகளையும் அனுபவிக்கின்ற சத்தி விசேடங்களையும் உடையேனாய்க்கொண்டு காலம் எல்லாம் நின்று அனுபவித்தாலுந்தான் நான் ஆர்வனோ?’ என்னுதல். 4கலக்கை - அவற்றோடே சேர்க்கை. அன்றிக்கே, ‘பார் 5விண் என்றதனால் உபய விபூதிகளையும் சொல்லி, நீர் என்றதனால் தன்மையைச் சொல்லி, உபய விபூதிகளிலும் உள்ளோர் அனுபவிக்கும் சத்தி சுபாவத்தையுடையேனாய்க் கொண்டு அனுபவித்தாலும் ஆர்வனோ என்கிறார்,’ என்னுதல். ‘நீர் இப்படி எல்லாருடைய உபகரணங்களையும் உடையீராய்க் கொண்டு காலம் எல்லாம்

__________________________________________________________________________

1. ‘ஆழி அம் கை’ என்றதனால் உருவமும், ‘எம்பிரான்’ என்கையாலே குணமும்
  சொல்லப்படுகையாலே, ஏனைய சொரூப விபூதிகளும் பொருள் ஆற்றலால் தாமே
  போதருமாதலின், அவற்றையும் சேர்த்துத் ‘தன்னுடைய’ என்று தொடங்கிப் பொருள்
  அருளிச்செய்கிறார்.

2. ‘கையும் திருவாழியுமான தன்னை இவர் கவிக்கு விஷயம் ஆக்கினானோ?’ என்ன.
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘வாய்கொண்டு’ என்று தொடங்கி. இது,
  திருவாய். 3. 9 : 9.

3. ‘முற்றும் கலந்து’ என்பதற்கு, ‘பிறர் எல்லாரும் நானும் கலந்து செய்ந்நன்றி செலுத்தினும்
  மனம் நிறைவு பெற்றவன் ஆவனோ?’ என்று மேலே பொருள் அருளிச்செய்தார்;
  இங்கு, ‘அவர்களுடைய வாக்கு முதலான கருவிகளையும் அனுபவிக்கின்ற சத்தி
  விசேடங்களையும் உடையேனாய்க்கொண்டு செய்ந்நன்றி செலுத்தினும் மனம் நிறைவு
  பெற்றவன் ஆவனோ?’ என்று வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘பாரிலுள்ளார்’ என்று தொடங்கி.

4. ‘‘கலந்து’ என்பது, இப்பொருளைக் காட்டுமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘கலக்கை’ என்று தொடங்கி.

5. மூன்றாவது பொருளில் ‘விண்’ என்பது, பரமபதத்தைக் காட்டுகிறது. ‘நீர்’ என்பது
  நீர்மையாய், அனுபவிக்கும் சத்தியைச் சொல்லுகிறது. ‘முற்றும்’ என்றது, ‘அனுபவிக்கிற
  சத்தி சுபாவம் எல்லாவற்றையும்’ என்றபடி.