பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அனுபவ

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 8

371

அனுபவியாநின்றாலும் ஆராமைக்கு அவன் செய்த உபகாரந்தான் யாது?’ எனின், அருளிச்செய்கிறார் மேல்:

    ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி - 1மேலே, ‘கவி பாடுகைக்கு இடமான இச்சையும் இல்லை’ என்றார்; இங்கு ‘அவ்விச்சைக்கு அடியான தகுதியும் இல்லை’ என்கிறார். இதனால், நன்மை இல்லாமையைச் சொன்னபடி. 2‘பிராமணர்கள் இந்தப் பிரமத்தை அறிய விரும்புகிறார்கள்,’ என்னாநிற்கச்செய்தேயும், ‘யாகத்தாலும் தானத்தாலும் தவத்தாலும் உபவாசத்தாலும்’ என்று யோக்கியதையைச் சொல்லிற்றே அன்றோ? அதுவும் இன்றிக்கே இருக்கிற என்னை என்கை. என்னால் தன்னைச் சீர் பெற - 3எல்லாக் கல்யாண குணங்களையுமுடையவனான சர்வேஸ்வரன். இக்கவிகளாலே தனக்கு நிறமாம்படியாகச் சொன்ன. 4நான் கவி சொல்லச் சர்வேஸ்வரனான தனக்கு இதனாலே நிறமாம்படி நினைத்திராநின்றான். 5இச்சீர் இழக்க வரினும் விட ஒண்ணாதபடியாயிற்றுக் கவியின் இனிமை. இன்கவி சொன்ன திறத்துக்கு - இப்படி இனிய கவிகளைச் சொன்ன பிரகாரம் ஒன்றுக்கும். 6மற்றைக் குணங்கள் குமர் இருந்து போமித்தனை. இப்பிரகாரம் ஒன்றுக்கும் ஆழி அம் கை எம் பிரான் புகழைப் பார் விண் நீர் முற்றுங்கலந்து பருகிலும் ஆர்வனோ?

(8)

__________________________________________________________________________

1. ‘மேலே’ ‘ஏர்விலா’ என்று வைத்து, இங்கும் ‘ஏர்விலா’ என்பது, கூறியது கூறல்
  ஆகாதோ?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மேலே’ என்று தொடங்கி.
  தகுதியாவது, புண்ணியம்.

2. ‘இச்சைக்குப் புண்ணியம் வேண்டுமோ?’ என்ன. ‘பிராமணர்கள்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். 

        ‘தம் ஏதம் வேதாநுவசநேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி
        யஜ்ஞேந தாநேந தபஸா அநாஸகேந’

என்பது, பிருக உபநிடதம், 6 : 4.

3. ‘சீர் பெற’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘எல்லாக் கல்யாண
  குணங்களையுமுடையவனான’ என்று தொடங்கி.

4. ‘நீர் கவி சொல்ல அவன் நிறம் பெறும்படி என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘நான் கவி சொல்ல’ என்று தொடங்கி.

5. ‘இன்கவி’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இச்சீர்’ என்று தொடங்கி.

6. ‘திறத்துக்கே’ என்ற ஏகாரத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘மற்றைக் குணங்கள்’
  என்று தொடங்கி. குமர் இருத்து போதல்-அனுபவயோக்கிய மின்றிக்கே இருத்தல்.