பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 10

375

    வி-கு : ‘அப்பனுக்குச் செய்வது இங்கும் அங்கும் எதுவும் ஒன்றும் இல்லை’ என்க. பதவிய - மிருதுவான; ‘திராக்ஷாபாகமான கவிகள்’ என்றபடி.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை என்று நீர் புண்படாநில்லாமல், உம்மதாய் இருப்பது ஒரு வஸ்துவை அவனுக்குப் பிரதியுபகாரமாகக் கொடுத்துப் பிழைத்துப் போக மாட்டீரோ?’ என்ன. ‘அப்படிச் செய்யலாமே அன்றோ ஈஸ்வரனைப்போலே நானும் எனக்கு உடைமையாய் இருப்பது ஒரு வஸ்துவைப் பெற்றேனாகிர்?’ என்கிறார்.

    உதவிக் கைம்மாறு - உபகாரத்துக்குப் பிரதியுபகாரமாக. என் உயிர் என்ன - 3‘நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்ச் சீர்மையையுடையதாய் இருப்பது ஒன்று உண்டே அன்றோ, ஆத்மவஸ்து? அதனைக் கொடுத்தாலோ?’ என்ன 3அது செய்யலாமே அன்றோ, அடியிலே மயர்வுஅற மதிநலம் அருளிற்றிலன் ஆகில்? முன்னரே அதனைக் கொடுத்து வைத்தானே! 4‘மயங்கி இருக்குங் காலத்தில் ஆத்தும சமர்ப்பணம் போலே இருப்பது ஒன்றாயிற்று,

________________________________________________________________________

1. இத்திருப்பாசுரக் கருத்தோடு ‘எனதாவியுள் கலந்த’ (திருவாய். 2. 3 : 4.) என்ற
  திருப்பாசுரக் கருத்தை ஒப்பிட்டுக் காணல் தகும்.

    திருப்பாசுரம் முழுதினையும் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ஆத்துமாவைப் பிரதியுபகாரமாகச் சமர்ப்பிக்கலாம் என்கைக்கு உறுப்பாக. இதனுடைய
  உயர்வினை அருளிச்செய்கிறார், ‘நித்தியமாய்’ என்று தொடங்கி.

3. ‘உற்று எண்ணில்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அது செய்யலாமே’ என்று
  தொடங்கி. ‘அதனை’ என்றது, மயர்வற மதிநலம் அருளினதை.

4. ‘அறிவில்லாதவன் ஆனால் ஆத்தும சமர்ப்பணம் பண்ணுமது ஒழிய, ஞானம்
  உண்டானால் செய்ந்நன்றியறிதலாலே ஆத்துமாவைச் சமர்ப்பிக்கப் போகாதோ?’ என்ன,
  ‘மயங்கி இருக்கும் காலத்தில்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  ‘மயங்கியிருக்குங் காலத்தில்’ என்றது, ‘பிரபத்தி செய்கிற காலத்தில்’ என்றபடி. ஆத்தும
  சமர்ப்பணமாவது, ஆத்மீய பரந்யாசம். பிரபத்தி செய்கிற காலத்தை. ‘மயங்கியிருக்குங்
  காலத்தில்’ என்றது, சமர்ப்பித்த பின்பு ‘சமர்ப்பிக்கத் தான் நான் யார்?’ என்று
  அநுதபிக்கும்படி இருக்கையாலே.