பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உபக

376

திருவாய்மொழி - ஏழாம் பத்து

உபகாரத்தின் நினைவாலே 1பிரதியுபகாரம் தேடிக் கலங்குகிற இது.’ 2மயங்கி இருக்குங்காலத்தில் ஆத்தும சமர்ப்பணந்தான் வேணும்: தௌந்த பின்னர், ‘என்னுடைய பொருளை அவனுக்குக் கொடுத்தேன்’ என்று இருக்கக்கடவன் அல்லன்; 3ஆத்துமா என்னுடையது என்று பல காலமாக எண்ணிப் போந்த அதிலும் கடையாயிற்று, தெளிந்த பின்னர் ‘நான் என்னுடைய பொருளை அவனுக்குத் தந்தேன்’ என்று இருக்குமாகில். 4பின்னையும் பழைய அபகாரமே தொடர்ந்தது ஆகுமே! ஞானம் பிறந்தமை அன்றோ? 5சர்வமுத்தி பிரசங்கம் வாராமைக்காக ஆத்தும சமர்ப்பணந்தான் வேண்டிவரும்; நெஞ்சிலே வெளிச்சிறப்பு உண்டானால் அவனுடைய பொருளினை அவனதாக இசைந்திருக்கக் கடவன். 6‘என்னால் கொடுக்கப் பட்டது அன்றி, உனக்கு யாது கொடுக்கிறேன்?’ என்னாநின்றது அன்றோ? 7‘எனது ஆவி தந்தொழிந்தேன்’ என்னா, ‘எனது

_________________________________________________________________________

1. ‘பிரதியுபகாரம் தேடிக் கலங்குகிற இது’ என்றது, ‘ஆத்தும சமர்ப்பணம் பண்ணுகிறோம்
  என்று கலங்குகிற இது’ என்றபடி.

2. ‘ஆனால், பிரபத்தி சமயத்தில் ஆத்தும சமர்ப்பணம் வேண்டாவோ?’ என்ன, ஆத்தும
  சமர்ப்பணம் பண்ணும் பிரகாரத்தையும், பண்ணியவுடனே இவன் இருக்கக்கூடிய
  விதத்தையும் அருளிச்செய்கிறார், ‘மயங்கி இருக்குங் காலத்தில்’ என்று தொடங்கி.

3. ‘அப்படி இருந்தாலோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஆத்துமா’ என்று
  தொடங்கி.

4. இது கடையாய படியைக் காரணம் முன்னாக விவரணம் செய்கிறார், ‘பின்னையும்’
  என்று தொடங்கி.

5. ‘ஆனால், செய்து அநுதபிக்க வேண்டுமோ? முதலிலே செய்யாதிருக்க ஒண்ணாதோ?’
  என்ன, இன்னதற்காகச் செய்யவேண்டும் என்னுமதனையும், செய்த பின்னர் இன்னபடி
  இருக்க வேண்டும் என்னுமதனையும் அருளிச்செய்கிறார், ‘சர்வமுத்தி’ என்று தொடங்கி.
  சர்வமுத்தி பிரசங்கம்-எல்லாரும் மோக்ஷத்தைப் பெற வேண்டியவர்கள் என்னும் தன்மை.
 
6. ‘அப்படிச் சமர்ப்பித்து அநுதபித்த பேர் உளரோ?’ என்ன, ‘என்னால்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

        ‘வபுராதிஷூ யோபி கோபி வா குணத: அஸாநி யதாததாவித:
         ததயம் தவபாத பத்மயோ: அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித:’

என்பது, ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த தோத்திரரத்நம் 52.

7. ‘எனதாவி’ என்றது, திருவாய். 2. 3 : 4. ஆக, ‘மயங்கி இருக்குங் காலத்தில் ஆத்தும
  சமர்ப்பணம்போலே’ என்றதனை விரித்து அருளிச்செய்து, பின்னர், ‘உபகாரத்தின்
  நினைவாலே பிரதி உபகாரம் தேடிக் கலங்குகிற இது’ என்றதனை விரித்து
  அருளிச்செய்யக் கோலி, அப்படி உபகாரத்தின் நினைவாலே கலங்கி ஆத்துமாவைச்
  சமர்ப்பித்து, தெளிந்த பின்னர் அநுதபித்த இடம் உண்டோ?’ என்னும் சங்கைக்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘எனதாவி’ என்று தொடங்கி.