ஆவ
|
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 10 |
377 |
ஆவி யார் யான் ஆர்?’
என்றார் அன்றோ? 1சொரூப ஞானம் பிறந்தால் பேற்றின் அளவும் செல்ல, இவ்விரண்டு
தன்மையும் தொடரக்கடவதாக இருக்கும். 2ஆக, ஆத்தும சமர்ப்பணத்துக்கும் செய்ந்நன்றி
அறிதலுக்கும் தனித்து இவனுக்குச் சம்பந்தம் இல்லாத படியான இவனுடைய அத்தியந்த பாரதந்திரியத்தைச்
சொல்லுகிறது.
உற்று எண்ணில் -
3ஆராயாதே மேல் எழ நின்று கொடுக்கில் கொடுக்கலாம்; நெஞ்சிலே சிறிது
வெளிச்சிறப்புப் பிறந்து இதனுடைய கொடுக்கத் தகுதி இல்லை. அதுவும் - ஆத்துமாவும். மற்று - அப்படிப்பட்ட
ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும். ஆங்கு அவன் தன்னது - பிரதியுபகாரம் செய்து தரிக்கவேண்டும்
நிலையில் அவனதாய் இராநின்றது. என்னால் தன்னை - செய்ந்நன்றி அறிதலுங்குங்கூடத் தகுதி இல்லாத
என்னாலே மஹோபகாரகனாய் இருக்கிற தன்னை. 4பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு - கவிபாட்டுண்கிறவனுக்கு
இக்கவி பாட்டாலே பண்டு இல்லாத நீர்மை உண்டாம்படியாகக் கவி பாடின உபகாரனுக்கு. எதுவும் ஒன்றும்
இல்லை செய்வது - ஏதேனும் ஒன்றும் செய்யலாவது இல்லை. 5‘இங்கு இருக்கும் நாள் ஞானக்
குறைவினாலே செய்யலாவது ஒன்று
___________________________________________________________________________
1. இதனால் பலித்த
பொருளை அருளிச்செய்கிறார், ‘சொரூப ஞானம்’ என்று தொடங்கி.
‘இவ்விரண்டு தன்மையும்’ என்றது,
செய்நன்றியறிதலால் சமர்ப்பிக்கையும், பின்னர்
அனுதபிக்கையுமாகிற இரண்டு தன்மையும் என்றபடி.
2. இத்திருப்பாசுரத்தால்
‘ஆத்தும சமர்ப்பணம் செய்யப்போகாது’ என்றதனால் பலித்த
பொருள், அத்தியந்த பாரதந்திரியம்
என்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி. அத்தியந்தம்
-மிகவும்.
3. ‘உற்று எண்ணில் அதுவும்
மற்று ஆங்கு அவன் தன்னது’ என்கிற இதனால் பலித்த
அர்த்தவிசேடத்தை அருளிச்செய்கிறார்,
‘ஆராயாதே’ என்று தொடங்கி. ‘தகுதி இல்லாத
என்னாலே’ என்றது, அத்தியந்த பரதந்திரினாகையாலே
என்றபடி.
4. பதவிய - பதம் உண்டாகும்படியாக;
நீர்மை உண்டாகும்படியாக. ‘பதவிய இன் கவி’
என்பதற்கு, ‘மிருதுவாய் இனிதான கவி’ என்பது
பொருளாகையாலே, ‘இதற்கு
மிருதுத்தன்மை யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘கவி
பாட்டுண்கிற’
என்று தொடங்கி.
5.
‘இங்கும் அங்கும்’ என்றதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இங்கு இருக்கும் நாள்’
என்று தொடங்கி.
|