இங
|
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 11 |
379 |
இங்கும் அங்கும் திருமால்
அன்றி இன்மை கண்டு - 1சாதனத்தைச் செய்கின்ற காலத்தோடு பேற்றினை அடைந்த
சமயத்தோடு வாசி அற, இந்த உலகம் பரமபதம் என்ற இரண்டிலும் திருமகள் கேள்வன் அல்லது
போக்கி, இவ்வாத்தும வஸ்துவுக்குத் தஞ்சமாக இருப்பார் வேறு இலர் என்னுமதனைச் சொல்லி;
2‘பண்டை நாளாலே நின் திருவருளும் பங்காய்த்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில்
சீய்த்து’ என்கிறபடியே, கைங்கரியம் செய்யுமிடத்திலும் அவள் முன்னாகச் செய்யவேணுமன்றோ?
அவனைப் பற்றுகிற வேளையிலும் அவள் முன்னாக வேணுமன்றோ? ஆதலின் ‘திருமால்’ என்கிறது. 3‘ஹதே
தஸ்மிந் ந குர்யு: - அவன் கொல்லப்பட்ட பின் செய்யமாட்டார்கள்’ என்கிறபடியே, ‘இராவணன்
சொல்லுகையாலே அன்று இருந்து நலிந்தார்களாகில், இராவணன் பட்டுப் போன இப்போதும் நலிவார்களோ?’
என்று அவர்கள் பக்கலிலும் குணத்தை ஏறிட்டுச் சொல்லும் நீர்மையையுடையவளாயிற்று. அங்ஙனே வண்குருகூர்ச்
சடகோபன் - 4நமக்கும் நல்லாசிரியன் அருகே இருந்து ‘திருமகள் கேள்வன் ஒழிய
இவ்வாத்துமாவுக்குத் தஞ்சமாய் இருப்பார் இலர்,’ என்று உபதேசித்தால், அத்தனை போதும்
__________________________________________________________________________
1. ‘இம்மை மறுமை என்னும்
இவ்விரண்டிலும் திருமாலே தஞ்சம்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்யாநின்றுகொண்டு, பதப்பொருள்
அருளிச்செய்கிறார், ‘சாதனத்தை’ என்று
தொடங்கி.
2. ‘பல வேளையிலும்
பற்றுகிற வேளையிலும் பிராட்டி சம்பந்தம் வேண்டுமோ?’ என்ன,
‘பண்டை நாளாலே’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது,
திருவாய் 9. 2 : 1.
3. ‘பற்றுகிற காலத்தில்
இவள் முன்னாகப் பற்ற வேண்டும்,’ என்பதற்கு, ‘இவன் குற்றத்தைப்
பார்த்துச் சர்வேஸ்வரன்
சீறுமளவில் அதனை மாற்றிச் சேர விடும்படியான
நீர்மையையுடையவளோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஹதே தஸ்மிந்’
என்று தொடங்கி.
‘ஹதே தஸ்மிந்
நகுர்யு: ஹி தர்ஜநம் வாநரோத்தம!’
என்பது, ஸ்ரீராமா. யுத். 116 :
41.
‘அன்னை அஞ்சன்மின்
அஞ்சன்மின் நீரெனா
மன்னு மாருதி மாமுகம்
நோக்கிவேறு
என்ன தீமை இவர்இழைத்
தார்அவன்
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய்!’
என்பது, கம்பராமாயணம்.
4. ‘அங்ஙனே’
என்றதற்கு மறுதலை முன்னாகப் பொருள் அருளிச்செய்கிறார், ‘நமக்கும்’
என்று தொடங்கி.
|