பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

380

திருவாய்மொழி - ஏழாம் பத்து

‘அப்படியே’ என்று இருக்குமது உண்டே அன்றோ? இவர் அங்ஙனம் அன்றிக்கே, அந்நினைவுக்குத் தகுதியான செயலையுமுடையவராய் இருப்பாராயிற்று.

    ‘ஆனால், மனம் வாக்குக் காயங்கள் என்னும் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமோ?’ என்னில், இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து - இந்த எண்ணத்தோடு சொல்லிற்றாயிற்று ஆயிரம் திருப்பாசுரங்களும். 2‘நீர், மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றிலும் ‘திருமகள் கேள்வனே இவ்வாத்தும வஸ்துவுக்குத் தஞ்சம்’ என்று அறுதியிட்டு அருளிச்செய்த இப்பாசுரங்களைக் கற்பார்க்கு, மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் புறத்து விஷயங்களினின்றும் மீள வேணுமோ? 3நீர், சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்தவராய் இராநின்றீர்; இவர்களுக்கு எல்லாம் பின்னை இப்படி வேணுமோ?’ என்னில், ‘அத்தேவைகள் எல்லாம் நம்மோடே: இது கற்பார்க்கு அது வேண்டா,’ என்கிறார்: எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்கும் - ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம். 4இவர்தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஈஸ்வரன் இவர்களைக் கடாட்சிப்பது? 5இல்லையாகில், இவர் தம்மைப்போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப்பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற்றத்தனை

________________________________________________________________________

1. ‘மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமோ?’ என்றது, ‘மனத்தின் தொழிலான
  உறுதியும், சரீரத்தின் தொழிலான அநுஷ்டானமும் போலே வார்த்தையும்
  ஒத்திருக்குமோ?’ என்றபடி.

2. ‘எங்ஙனே சொல்லிலும்’ என்றதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘நீர்,
  மனம் வாக்கு’ என்று தொடங்கி.

3. மேலே அருளிச்செய்த வாக்கியத்தை விவரணம் செய்கிறார், ‘நீர்
  சிந்தையாலும்’ என்று தொடங்கி. ‘சிந்தையாலும்’ என்றது, திருவாய். 6. 5 : 11.

4. அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘இவர்தம்முடைய’ என்று
  தொடங்கி.

5. ‘சொல்லிலும்’ என்ற உம்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘இல்லையாகில்’ என்று தொடங்கி.