பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பண

38

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பண்ணிக்கொடுத்தோம்,’ என்றே அன்றோ அவன் இருக்கிறது? அது போராதே அன்றோ? சம்சாரத்தை வாசனையோடே போக்க வேண்டி இருக்குமன்றோ இவர்க்கு?

    உன் சின்னமும் திருமூர்த்தியும்- ‘தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்’ என்றும், ‘அரவிந்தலோசனன்’ என்றும் சொல்லுகிறபடியே, திவ்விய ஆயுதங்களையும் அவற்றுக்கு ஒப்பாயிருக்கிற திருமேனியையும். சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு-இவற்றை நெஞ்சாலே நினைத்து’ உள்ளடங்காமல் வாய் விட்டுத் துதி செய்து, பின்னைத் திருவடிகளில் விழுகைக்குத் தகுதியாக எனக்கு அருளவேணும். என்றது, 1‘வாயாலே ஒன்று சொல்லாநிற்க, நெஞ்சு வேறே ஒன்று நினைத்தல்; ‘உனக்கு அடிமை’ என்று வேறே ஓர் இடத்தில் தொழில் செய்தல் செய்கை அன்றிக்கே. மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் உன் பக்கல் ஈடுபடும்படி செய்தருள வேணும்’ என்றபடி. என் அம்மா-எனக்குத் தாய்போல் பரிவன் ஆனவனே! அழைக்கும் பெயராகையாலும் சேதநனைச் சொல்லுகையாலும் ‘அம்மே’ என்பது ஆகாரம் ஏற்று விளியாய் ‘அம்மா’ என்று கிடக்கிறது. என் கண்ணா- 2அந்தப் பரிவை அநுஷ்டான பரியந்தமாக்கினவனே! இமையோர்தம் குலமுதலே-ஒரு நாட்டுக்காக உன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்குமவனல்லையோ? 3பலருடைய ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்காலாகாதோ? என் அம்மா என் கண்ணா இமையோர்தம் குல முதலே- 4எனக்குச் சுவாமியாய், ‘சொத்தை நசிக்கக் கொடுக்க ஒண்ணாது’ என்று கிருஷ்ணனாய்

____________________________________________________________________

1. ‘தொழவே’ என்ற ஏகாரத்தின் பொருளை விரிக்கிறார், ‘வாயாலே’ என்று தொடங்கி.
  என்றது, ‘முக்கரணங்களும் உன் பக்கலிலே ஆக வேண்டும் என்றபடி.

2. அந்தப் பரிவை-மேலே கூறிய தாயினது பரிவை. பரிவு-அன்பு.

3. ‘அவர்கள் பலர் ஆகையாலே செய்தோம்’ என்ன, ‘பலருடைய’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. ‘அம்மா’ என்பதற்குத் தாயினது அன்பு போன்ற அன்புடையவன் என்று மேலே
  பொருள் அருளிச்செய்கிறார்; ‘ஸ்வாமி’ என்று வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார், ‘எனக்குச் சுவாமியாய்’ என்று.