பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

394

திருவாய்மொழி - ஏழாம் பத்து

வெற்றி பொருந்திய கருடப்பறவையின்மேலே கண்டு கைகூப்பித்தொழுதலே அல்லாமல், அவன் எழுந்தருளியிருக்கின்ற. பேசப்படுகிற பெரிய புகழையுடைய நான்கு மறைகளையும் ஐந்து யாகங்களையும் ஆறு அங்கங்களையும் நன்கு கற்று ஓம்புகின்றவர்களான அந்தணர்கள் வாழ்கின்ற, நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தைத் தொழுவதற்கு எப்பொழுதும் வாய்க்குமோ?

    வி-கு :
‘அவன் உறையும் திருவாறன்விளை; பன்னினர் வாழ் திருவாறன்விளை’ என்க. ‘புகழ்’ என்பதனை, ‘பன்னினர்க்கு’ அடையாக்கலுமாம்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘திருவாறன்விளையில் எம்பெருமான் பெரிய திருவடிமேல் ஏறி எழுந்தருளக்கண்டாலும், அதனைத் தவிர்ந்து திருவாறன்விளையைத் தொழக் கூடவற்றே?’ என்கிறார்.

    கூடுங்கொல் வைகலும் - இதுவும் அநுபாஷணமாய், ‘நாள்தோறும் நமக்கு இது கூடவற்றேயோ?’ என்கிறார். கோவிந்தனை மதுசூதனைக் கோள் அரியை - 2அங்கு நிற்கிறவனைக் கண்டால் மூன்று படி தொடை கொள்ளலாய் இருக்கும். ஆஸ்ரித வாத்சல்யம், ஆஸ்ரித விரோதி நிரசின சீலதை, அடியர் அல்லார்க்குக் கிட்டுதற்கும் அரியன் என்னும் இவை. ‘ஜ்வலந்தம் - விளங்குகின்றவனை’ என்கிறபடியே, ‘கோளரி’ என்கிறார். ஆடுபறவை மிசைக்கண்டு - வெற்றிப் புள்ளின்மேலே கண்டு. ஆடு - வெற்றி. அன்றிக்கே, சர்வேஸ்வரன் வாகனம் என்கிற உவகையின் மிகுதியாலே கட்குடியர் போன்று களித்து ஆடாநின்றுள்ள திருவடி திருத்தோளிலே கண்டு என்னுதல். 3நாம் திருவாறன்விளையைப் பிராப்பியம் என்று போகிறதைப் போன்று, அவனும் திருநகரியை’

________________________________________________________________

1. ‘ஆடு பறவைமிசைக்கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும்
  திருவாறன்விளை தொழ வாய்க்குங்கொல்?’ என்றதனைக் கடாட்சித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. மூன்று திருப்பெயர்களைச் சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘அங்கு நிற்கிறவனை’ என்று தொடங்கி. தொடை கொள்ளுதல்-தோன்றுதல்.
  ‘கோள் அரி’ என்பதற்கு, ‘ஒளியையுடைய சிங்கம்’ என்று பொருள்
  கொண்டு, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘ஜ்வலந்தம்’ என்று இது,
  நரசிம்மம்.

3. ‘பெரிய திருவடிமேலே காண்கைக்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ’நாம்’ என்று தொடங்கி.