பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உத

பத்தாந்திருவாய்மொழி - பா. 3

395

உத்தேசியமாம் என்று வாராநிற்கும் அன்றோ? கண்டு - நடுவழியிலே கண்டால். கைதொழுது - 1காரியங் கொண்டிலோமே ஆகிலும், கிட்டினால் கைதொழுகைக்குச் சம்பந்தம் உண்டே அன்றோ? ஆகையாலே முறை தப்பாமல் பணிதல் செய்து. அன்றி - அவனை விட்டு. அவன் உறையும் - 2அவன் இராத் தங்கும் ஊரிலே போய்ப் புகக் கடவோம்; 3சர்வேஸ்வரன் பிராப்பியன் ஆகாநிற்கச் செய்தே ஒரு தேச விசேடத்திலே போய் அனுபவிப்பதாக ஒரு நியதி உண்டு அன்றோ?

    பாடும் பெரும்புகழ் நான்மறை - 4அவனுடைய கல்யாண குணங்களைப் பாடாநின்றுள்ள நான்கு வகைப்பட்ட வேதங்கள். வேள்வி ஐந்து - ஐந்து பெரிய யாகங்கள். ஆறு அங்கம் - அங்கங்கள் ஆறும். இவற்றைப் பன்னினவர்கள் - எஃகிக்கரை கண்டு இருக்குமவர்கள். 5‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும். வாழ் - 6வேததாத்பரியனானவனைக் கண்களாலே கண்டு அனுபவித்து வாழாநின்றுள்ள. நீடு பொழில் திருவாறன்விளை தொழ - ஓக்கத்தையுடைத்தான பொழிலையுடைய திருவாறன்விளையைத் தொழ. வாய்க்குங்கொல் நிச்சலுமே -அங்குலத்தை ஸ்ரீவைஷ்ணவர்களோடே கூடி நித்தியானுபவம் பண்ணக் கூடவற்றேயோ?

(3)

______________________________________________________________

1. ‘அவனை விட்டு அத்தேசத்திற்குச் சொல்லுகிற ஆழ்வார்க்கு அவனைத்
  தொழ வேண்டுவான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘காரியம்’ என்று தொடங்கி. இதனால், ‘சரமபர்வ நிஷ்டர்க்கும் ஈஸ்வரன்
  உத்தேசியம்’ என்றபடி.

2. ‘அவன் இங்கே வந்தால் திருநகரி பிராப்பியமாக இருக்க, அங்கே
  போவான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவன்’
  என்று தொடங்கி.

3. ‘எதிரே வந்தவனை விட்டு அங்கே போவான் என்?’ என்ன. அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி.

4. ‘பெரும்புகழ் பாடும் நான்மறை’ என்று கூட்டுக.

5. இப்போது இவர்களைச் சொல்லுதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘ஒருவர்க்கு ஒருவர்’ என்று தொடங்கி. ‘போதயந்த: பரஸ்பரம்’ என்பது,
  ஸ்ரீகீதை. 10 : 9.

6. ‘வாழ்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘வேததாத்
  பரியனானவனை’ என்று தொடங்கி.