பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

மரண த

பத்தாந்திருவாய்மொழி - பா. 4

397

மரண தசையிலே வருவது ஒரு துர்க்கதி உண்டு, அதனைப் போக்கித் தரவேணும் என்று பிரார்த்திக்கிறேன் அல்லேன்; 1ஐயார் கண்டம் அடைக்கிலும் நின்கழல் எய்யாது ஏத்தும்படி செய்தருள வேணும். த்வத் கதோ மே மநோரத: - எனக்கு இது கூடும் என்று தோற்றி இருந்ததோ உனக்கு? யதிநாசம் நவிந்தேத - இப்படி இருக்கிற இந்த எண்ணத்திற்கு அழிவு வாராதாகில். தாவதாஸ்மி க்ருதீஸதா - உலகத்தார், எண்ணம் என்றும் அனுபவம் என்றும் இரண்டாக அன்றோ சொல்லிப் போருவது? எனக்கு இவை எல்லாம் வேண்டா; இந்த எண்ணம் மாத்திரத்தாலே கிருத கிருத்தியன் நான். ஸதா - சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்திலே சென்று ஏற்றமாக அனுபவிக்குமதனைக்காட்டில், நான் பேறாக நினைத்து இருப்பது இதனையே’’ என்பது, ஜிதந்தா.

    2
முற்காலத்தில் இடையாற்றுக்குடி நம்பி என்பார் ஒருவர் இருந்தனர்; அவர் திருநாள்கள்தோறும் வந்து பெருமாளைச் சேவித்துப் போனால், மறித்துத் திருநாள் வருந்தனையுப் அதனையே போது போக்காக நினைத்துக்கொண்டு இருப்பாராயிற்று; 3ஒருநாள் ஒரு திருநாளின் வைபவத்தை நினைத்திராநிற்கச் செய்தே, ‘அமுது செய்கைக்குப் போது வைகிற்று’ என்றார்களாக, ‘ஆகில் வருகிற திருநாள் அணித்தாகிறது’ என்றாராம். 4அவர் நூறு வயதும் புகுகையாலே வலிமை குன்றித் திருமுளைத்திருநாளில் பெருமாள்

______________________________________________________________

    ‘துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத்கதோ மநோரத:
     யதி நாஸம் நவிந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா’

என்பது, ஜிதந்தா. 

1. ‘ஐயார் கண்டம்’ என்பது, திருவாய். 2. 9 : 3.

2. ‘அப்படி மனோரதமே புருஷார்த்தமாய் அனுபவித்த பேர் உளரோ?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘முற்காலத்தில்’ என்று
  தொடங்கி.

3. ‘இப்படி இருப்பர் என்பதற்குக் காரணம் யாது?’ என்ன, ‘ஒருநாள்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். வைகிற்று - கழிந்தது,
  வருகிற திருநாள் - இரண்டாம் திருநாள். இதனால், இப்போது
  அநுசந்திக்கிற திருநாள் முடிந்தது; ‘வருகிறேன்’ என்றபடி.

4. இடைப்பிற வரலாக அவர் வைபவத்தை அருளிச்செய்கிறார், ‘அவர்’
  என்று தொடங்கி.