புறப
|
398 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
புறப்பட்டருளுகைக்கு உதவ
வந்து புகுரப்பெற்றிலர்: பெருமாளும் தேடியருளக்காணாமல், ‘நம் இடையாற்றுக்குடியான் வந்திலன்’
நங்கண்ணாலம் அல்லவோ!’ என்று திருவுள்ளமானாராம். அவர்தாம் ஆறாந்திருநாளிலே சேவித்திருக்கச்
செய்தே, ‘நாம் உனக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று கேட்டருள, ‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக்
கொண்டு போரக் காரியம் கொண்டேன்; இனிப் போக்குவரத்துக்குத் தகுதி இல்லாதபடி போர இளைத்தது’
என்ன, ‘வாராய், மெய்யே இளைத்தாயாகில்: இங்ஙனே இரு’ என்று அருளிச்செய்தார்; பெருமாள் நடுவிலை
திருவாசலுக்கு அவ்வருகே எழுந்தருளுங்காட்டில் அவர் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
வாய்க்கும்
கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திருவாறன் விளை - இட்டவை முழுதும் நிறைந்து இருப்பதான தேசமாயிற்று
வாய்த்த கரும்பும், அதற்கு நிழல் செய்யும்படியாக வளர்ந்த செந்நெலுமான வயலாலே சூழப்பட்ட திருவாறன்
விளையிலே. வாய்க்கும் பெரும்புகழ் - இட்டவை முழுதும் நிறைந்து இருப்பதான தேசமாகையாலே அத்தேசத்தை
விரும்பி இருப்பவனுக்கும் கல்யாண குணங்களும் நிறைந்து இருக்குமாயிற்று. மூன்று உலகு ஈசன் வடமதுரைப்
பிறந்த - 1எல்லா உலகங்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து வைத்து, நல்லார்களை நலம்
புரிந்து காத்தல் நிமித்தமாக ஸ்ரீமதுரையிலே வந்து அவதரித்த. வாய்க்கும் மணி நிறம் கண்ணபிரான்
- தன் 2பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை அன்றோ இதர ஸஜாதீயம்
ஆக்கிற்று? ஆகையாலே, அழகிய நீலமணி போன்ற திருநிறத்தையுடைய உபகாரத் தன்மையனான கிருஷ்ணனுடைய
மலர்ச்சி பொருந்திய திருவடிகளாகிற செவ்விப் பூக்களை ஈங்கு மனத்து நினைக்கப்பெற
வாய்க்குங்கொல். நிச்சலும் எப்பொழுதும்.
(4)
________________________________________________________________
1. ‘மூவுலகு’ என்றதனை, எல்லா
உலகங்களுக்கும் உபலக்ஷணமாக்கிப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘எல்லா உலகங்களுக்கும்’ என்று தொடங்கி.
2. ‘இதர சஜாதீயனாய் அவதரித்த இடத்தே வாய்க்கும் மணி நிறம்
உண்டோ?’ என்ன, ‘பிரகிருதி சம்பந்தம்
இல்லாத’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘வாய்க்கும்’ என்பது, ஈண்டு
அழகினைக்
குறிக்கிறது.
|