இவர
|
4 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
இவர்க்கு இப்போது இழக்க
வேண்டுவது இல்லை அன்றோ? 1ஆயின், பலியாது ஒழிவான என்?’ என்னில், 2‘இவர்
குறையால் வைத்தாலன்றோ பலித்தது இல்லையாவது? நமக்காக இருக்கிற பின்பு இவர் இங்கே இருந்தால்
நல்லது,’ என்றிருந்தான். 3அவனும் இவரைக் கொண்டு ஒரு காரியம் கொள்ள அன்றோ
எண்ணி இருக்கிறது? 4அதுவும் ஒழிய, இவருடைய திருமேனி இறுதியானதாகையாலே, இவர் சரணாகதி
செய்த இடத்திலும், இவர் திருமேனியில் தனக்குப் பிராவண்யத்தாலே காரியம் செய்திலன். இவர்
திருமேனியில் அவனுக்கு உண்டான பிராவண்யத்தைக் கண்டே அன்றோ 5‘மங்க ஒட்டு’ என்று
அவனைக் காற்கட்டிற்றும்? 6மெய்யான பிரேமம் உண்டானால் இங்ஙன் அல்லது இராதே.
7இது பிரகிருதி ஆயிற்றே அவனுக்கு. 8அவன் தம்மைக்கொண்டு கொள்ள
_______________________________________________________________________
1. ‘அப்படியாயின்,
இவருடைய விருப்பத்தை முடிக்காததற்குக் காரணம் என்?’ என்கிற
சங்கையை அநுவதிக்கிறார்,
‘ஆயின்’ என்று தொடங்கி.
2. அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இவர் குறையால்’ என்று தொடங்கி.
3. ‘நமக்காக இருக்கிற
பின்பு’ என்று தொடங்கும் மேல் வாக்கியத்தை விவரணம்
செய்கிறார், ‘அவனும்’ என்று தொடங்கி.
‘ஒரு காரியம் கொள்ள’ என்றது,
இவரைக்கொண்டு உலகத்தைத் திருந்தச்செய்வது ஒரு காரியத்தை.
4. மேலதற்கே வேறும் ஒரு
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அதுவும் ஒழிய’ என்று
தொடங்கி.
5. ‘மங்க ஒட்டு’ என்பது,
திருவாய்மொழி. 10. 7 : 10.
6. ‘மற்றையோரிடத்தில்
இங்ஙனம் பிராவண்யத்தைச் செலுத்தக்காணோமோ?’ என்ன,
‘மெய்யான’ என்று தொடங்கி, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
7. மெய்யான பிரேமமுடையார் திருமேனியிலே
அவனுக்குப் பிராவண்யம் சஹஜம்
என்னுமதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார்.
‘இது பிரகிருதியாயிற்றே அவனுக்கு’
என்று. இது - பிராவண்யம். பிரகிருதி - இயல்பும் பிரதானமும்.
8. ‘மயர்வற மதிநலம் அருளப்பெற்றவராகையாலே
ஈஸ்வரன் தம்மை இங்கு
வைத்திருக்கும் காரியத்தை
அறிந்திருக்கக்கூடுமே? அங்ஙனமிருந்தும்,
இவர்
விரைவதற்குக் காரணம் என்?’ என்ன, ‘அவன்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
‘இதில் பொருந்துவாரை’ என்றது, திருமழிசைப்பிரான்
போல்வாரை.
|