பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - முன்னுரை

5

இருக்கிற காரியத்தை இதில் பொருந்துவாரைக் கொண்டு கொண்டால் ஆகாதோ என்றாயிற்று இவர் நினைத்திருக்கிறது. 1‘செய்து கொடுத்த ஞானலாபம் இவர் தரித்திருப்பதற்குக் காரணமாம்,’ என்றிருந்தான் அவன்; அதுதானே விரைவதற்குக் காரணமாயிற்று இவர்க்கு. 2‘கிரமத்திலே காரியம் செய்கிறோம்’ என்றிருந்தான் அவன்; அதுதன்னையே கொண்டு ‘நம்மைக் கைவிட நினைத்தான்’ என்றிருக்கிறார் இவர்.

    3
நித்தியவிபூதியையும் திவ்விய மங்கள விக்கிரஹத்தையும் கண்ணாற்கண்டு, ‘அங்கே போய் அப்படியே அநுபவிக்கவேணும்’ என்னும் பதற்றத்தையுடைய இவர்க்கு.
சம்சாரம் ததீயமாயிருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு’ என்னும் ஞானமாத்திரத்தாலே தரித்திருக்கப் போகாதே. 4‘யானும் நீ தானாய்த் தெளிதோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்’ என்றே அன்றோ இவர் இருப்பது?

    5
இப்படி இருக்கிற தம்மையும், 6‘அவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் குறைவற்று இருக்கிறபடியையும், காக்குந்தன்தை சொரூப

________________________________________________________________________

1. ‘மேற்கூறிய காரணத்தால் வைத்தானேயாகிலும், துன்புறுகிற இவரைத் தரிப்பிக்க
  வேண்டாவோ?’ என்ன, ‘செய்துகொடுத்த’ என்று தொடங்கி, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். ‘ஞானலாபம்’ என்றது, ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது
  தன்னையே பற்றியது என்று சொல்லலாம்படியான ததீயத்வபிரதிபத்தியை. ததீயத்வம்
  - அவனுக்கு உரிய பொருள், பிரதிபத்தி - நினைவு.

2. ‘நமக்காக இருக்கிற பின்பு’ என்ற மேலே அருளிச்செய்த வாக்கியத்தை விவரணம்
  செய்கிறார், ‘கிராமத்திலே’ என்று தொடங்கி.

3. ‘மேலே காட்டிக்கொடுத்த ததீயத்வ பிரதிபத்தியாலே தரித்திருக்க ஒண்ணாதோ?’
  என்ன, ‘நித்திய விபூதியையும்’ என்று தொடங்கி. அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. அந்த ஞானமாத்திரத்தாலே தரித்திருக்கப் போகாமைக்குப் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘யானும்’ என்று தொடங்கி. இது திருவாய்மொழி. 8. 1 : 9. ‘அஞ்சுவன்’ என்றது,
  ‘சேஷமாக இருக்கும் தன்மைக்கு விரோதமாகையாலே’ என்றபடி. இதற்கு, ‘வானுயர்
  இன்பம் மன்னி வீற்றிருந்தாய்’ (ஷ. திருவாய்.) என்றதிலே நோக்கு.

5. இங்ஙனம் இடைப்பிற வரலாக வந்த சங்கைக்கு விடை அருளிச்செய்து, பின்,
  திருப்பாசுரங்களுக்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இப்படி இருக்கிற’ என்றது முதல்
  ‘கிடந்து கூப்பிடுகிறார்’ என்றது முடிய. ‘இப்படி இருக்கிற தம்மையும்’ என்றது,
  ‘அவனைப் பெற வேண்டும் என்னும் ஆர்த்தியோடே சரணாகதி செய்த தம்மையும்’
  என்றபடி.

6. ‘உலக மூன்றுடை’, ‘கடல் ஞாலம் காக்கின்ற’, ‘அண்ணலே’, ‘வலமுதல் கெடுக்கும்
  வரமே தந்தருள்’,
‘குணங்கள் கொண்ட மூர்த்தி’