பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

6

திருவாய்மொழி - ஏழாம் பத்து

மாயிருக்கிறபடியையும், காத்தற்குத்தொடர்பு இருக்கிறபடியையும், தமக்கு இவற்றில் தொடர்பு அற்று இருக்கிறபடியையும், சத்துவம் முதலான குணங்கள் அவற்றிற்கு அடியான 1கர்ம தேஹ இந்திரியங்கள் இவற்றிற்கு அடியான மூலப்பகுதி மஹான் அஹங்காரம் அதன் காரியமான விஷயங்கள் அவித்யை கருமம் வாசனை ருசி ஆகிய இவை எல்லாம் அவனுக்கு வசப்பட்டவைகளாய் இருக்கிறபடியையும் நினைத்து, 2‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்தே வைத்தபோதே இவற்றுக்கு நம்மை இரையாக்கிப் போகட நினைத்தானித்தனை: ‘தள்ளுகிறேன்’ என்கிற கூட்டத்திலே புக்கோம். ‘இனித்தான், இவன் பரிகரங்கள் கண்டதும் நம்மை அகற்றுகைக்கு உறுப்பாக. அவற்றுள், நித்திய விபூதியில் ஓலக்கம் இருக்கிறது, நாம் படுகிற நலிவு கண்டு அங்குள்ளாருடனே கூடச் சிரித்திருக்கைக்கு; லீலாவிபூதி கண்டது நமக்குச் சிறைக்கூடமாக. மயர்வற மதிநலம் அருளிற்றும், அல்லாதாரைப் போன்று சுகமே இராமல் துடித்து நோவு படுகைக்காக’ என்று அறுதியிட்டு, அவன் திருவடிகளிலே தலையை மடுத்து, கேட்டார் அடங்கலும் நீராம்படி கிடந்து கூப்பிடுகிறார்.

    3
‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியில், ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தாராய்ப் பிரணய ரோஷம் தலை

________________________________________________________________________

  என்பனவாக இத்திருவாய்மொழியில் வருகின்றனவற்றைத் திருவுள்ளம் பற்றி,
  ‘அவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள்’ என்றது முதல் ‘சத்துவம் முதலான
  குணங்கள்’ என்றது முடிய அருளிச்செய்தபடி. ‘இவற்றில்’ என்றது, ‘பாதுகாத்தல்
  முதலானவற்றில்’ என்றபடி.

1. ‘குணங்கள் கொண்ட மூர்த்தி’ என்று சத்துவம் முதலான குணங்களைச்
  சொல்லுகையாலே, அவற்றால் போதருகின்ற ‘கர்ம தேஹ இந்திரியங்கள்’
  முதலானவற்றையும் சேர்த்து அருளிச்செய்கிறார்.

2. ‘குமை தீற்றி நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என வருதலைத் திருவுள்ளம்
  பற்றி, ‘விஷயங்களும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘க்ஷிபாமி’ என்பது,
  ஸ்ரீகீதை. ‘பரிகரங்கள்’ என்றது, நித்திய விபூதி தொடக்கமானவற்றை. இதனை
  விவரணம் செய்கிறார், ‘அவற்றுள்’ என்று தொடங்கி.

3. மேலே போந்த திருவாய்மொழியைக்காட்டிலும் இத்திருவாய்மொழியில் துன்பம்
  அதிகரித்திருக்கும் என்கிறார், ‘மின்னிடை மடவார்’ என்று தொடங்கி.