ம
|
408 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
மதுவும் தவிர்ந்து,
1‘யானை கரையில் இழுக்கின்றது; முதலை நீரில் இழுக்கின்றது’ என்கையாலே, தான் தன்னை
இரட்சகமாக நினைத்திருக்குமதுவும் தவிர்ந்து. 2‘மனத்தால் எண்ணிற்று’ என்கையாலே,
‘கூப்பிடுங்காரியகரமாம் எல்லையுங்கழிந்தது’ என்றபடி. 3அவனைப் பார்த்தால் தானும்
அல்லாதாரைப் போன்று புறம்பாய்க் கடக்க நிற்கும்படியாய் அன்றோ சம்பந்தம் இருக்கும்படி?
4ஆகைச் சுட்டி அன்றோ பிரணவத்தில் நடுப்பதம் கிடக்கச்செய்தே அன்றோ திருமந்திரத்தில்
நடுப்பதம் ஜீவிக்கிறதும்?
அகல் இரும்பொய்கையின்வாய்
- அகலத்தையும் ஆழத்தையும் சொல்ல வேண்டுமளவிலே, அகலத்தைச் சொல்லி ‘இருமை’ யைச்
சொல்லுகையாலே அது ஆழத்தைச் சொல்லிற்றாகக் கடவது. ‘இப்போது அகலமும் சொல்லுகிறதற்குக்
கருத்து என்?’ என்னில், அவன் உபாயமாய்க் காத்தல் இல்லையாகில் முடிதல்
______________________________________________________________
1. ‘கஜ ஆகர்ஷதே தீரே
க்ராஹ ஆகர்ஷதே ஜலே’
என்பது, விஷ்ணு தர்மம், 68.
2. ‘பரமாபதம் ஆபந்ந:
மநஸாசிந்தயத் ஹரிம்
ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண
பாராயண:’
என்பது, விஷ்ணு தர்மம், 68.
3. ‘‘மற்று’ என்றால், பிறரைக்
காட்டுமேயன்றித் தன்னையும் காட்டுமோ?’
என்ன அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவனைப்
பார்த்தால்’
என்று தொடங்கி.
4. ‘நன்று;
தன்னுடைய இரட்சணத்தில் தனக்குச் சம்பந்தம் இல்லை என்னும்
இடம் எங்கே சொல்லிற்று?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஆகைச்சுட்டி’ என்று தொடங்கி. ‘ஆகைச்சுட்டி’ என்றது, ‘தன்னுடைய
இரட்சணத்தில் தனக்குச் சம்பந்தம் இல்லாமையாலே அன்றோ?’ என்றபடி.
பிரணவத்தில் நடுப்பதம்,
உகாரம், திருமந்திரத்தில் நடுப்பதம் ‘நம:’
என்பது, ‘இத்தால் (உகாரத்தால்) தனக்கும்
பிறர்க்கும் உரித்தன்று
என்கிறது.’ 65. ‘நமஸ்ஸூ, ந என்றும், ம: என்றும் இரண்டு பதம்.’ ‘ம:
என்கிற இத்தால் தனக்கு உரியன் என்கிறது. ‘ந’ என்று அத்தைத்
தவிர்க்கிறது.’ ‘ஆக, நம: என்கிற
இத்தால், தனக்குரியன் அன்று என்கிறது,’
78-80. ஈஸ்வரன் தனக்கேயாயிருக்கும்; அசித்துப்
பிறர்க்கேயாயிருக்கும்;
ஆத்துமா தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருக்கும் என்னும் முற்பட்ட
நினைவு;
அங்ஙனன்றிக்கே அசித்துப்போலே தனக்கேயாக எனைக்
கொள்ளவேணும் என்கிறது நமஸ்ஸால்’ 91. என்பன
போன்ற சூத்திரங்களை
இங்கு அநுசந்திக்கத் தகும். முழுக்ஷூப்படி, திருமந்திரப் பிரகரணம்.
|