New Page 1
|
பத்தாந்திருவாய்மொழி
-
பா. 8 |
409 |
செய்யுமித்தனை
போக்கி, தான் வேறு ஒரு கரை காண மாட்டான் ஆகாதே. அகல் இரும்பொய்கையின்வாய் நின்று -
1அச்சமுள்ள இடத்தே அச்சமில்லாத இடத்திற்போலே நிற்கும்படியாயிற்றுச் செயல்
மாட்சி. 2முதலை நீரிலே இழுக்க, யானை கரையிலே இழுக்க, இரண்டனுடைய செயலுமாய்ச்
செல்லுகை தவிர்ந்து ஒன்றனுடைய செயலேயாய் நிற்கை. தன் நீள் சுழல் - 3எதிர்த்தலையின்
செயல் மாட்சியே எல்லையாக வளரும் திருவடிகள். அன்றிக்கே, 4‘முதலைவாயிலே அகப்பட்டு
நிற்கச் செய்தேயும், அவனை நினைத்தால் அச்சங்கெட்டு இருக்கலாம்படி அன்றோ தான் இருப்பது?’
என்னுதல், 5‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் அஞ்சுகின்றான் இலன்’ என்னக் கடவது
அன்றோ? 6‘குதஸ்சந’ - பிரமாதிகத்துக்கு அன்றியே புத்தி பூர்வமாகப் பண்ணினதற்கும்
அஞ்சவேண்டாத படியாயிருக்கும். ‘செய்தாரேல் நன்று செய்தார்’ என்றால், இவன் எதற்கு அஞ்ச வேண்டும்?
7புத்தி பூர்வமாகச் செய்வனவற்றிற்கு அஞ்சவேண்டாவிட்டால் பிராமாதிகத்துக்கு அஞ்சவேண்டா
என்னு
________________________________________________________________
1. ‘நின்று’ என்பதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘அச்சமுள்ள இடத்தே’
என்று தொடங்கி. ‘செயல் மாட்சி’ என்றது, செயல்
அற்று நின்ற நிலையை.
2. ‘செயல் மாட்சியை’
விளக்குகிறார், ‘முதலை’ என்று தொடங்கி. ஒன்றனுடைய
- முதலையினுடைய.
3. ‘நீள்கழல்’ என்பதிலே
‘நீள்’ என்ற சொல்லின் பொருளை விளக்குகிறார்,
‘எதிர்த்தலையின்’ என்று தொடங்கி.
‘எதிர்த்தலை’ என்றது, இத்தலையை.
4. ‘நீள்’ என்பதற்கு வேறும்
ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘முதலை
வாயிலே’ என்று தொடங்கி.
5. ‘அப்படி அச்சம் கெட்டு
இருக்கலாமோ?’ என்ன, கெட்டு இருக்கலாம்’
என்பதற்குப் பிரமாணம் அருளிச்செய்கிறார்,
‘இறைவனுடைய’ என்று
தொடங்கி.
‘ஆனந்தம் பிரஹ்மணோ வித்வாந்
ந பிபேதி,’ என்பது, தைத். உப.
ஆனந்.
6. ‘குதஸ்சந’ என்பது,
தைத். உப. ஆனந்.
பி்ராமாதிகம் - தன்னை
அறியாமலே வருவது. புத்திபூர்வகமாகப்
பண்ணினதற்கும் அஞ்சவேண்டாமைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘செய்தாரேல்’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2.
7.
‘ஆனால், பிரமாதிகத்துக்கு எப்படி?’ என்ன, ‘புத்தி பூர்வகமாக’ என்று
தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
|