1
பத்தாந்திருவாய்மொழி
-
பா. 10 |
413 |
1‘இங்கு
இருந்த நாள் உண்டான சங்கோசத்தாலே ‘திருவாறன்விளையே பிராப்பியம்’ என்று சொல்லுகிறீர்:
சங்கேயம் கழிந்தவாறே பரமபதத்திலே தோள் மாறுகிறீர்,’ என்ன, ‘அது வேண்டா; சங்கோசம் கழிந்தால்
நான் இருக்கும்படியைக் கேட்கல் ஆகாதோ? என்கிறார்: தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி -
பண்டு செய்த அவித்தியை கர்மம் வாசனை ருசி என்னும் இவைகள், ஆத்துமாவைத் தீண்டாதனவாய்க்
கொண்டு. தெளிவிசும்பு ஏறல் உற்றால் - திருநாடு ஏறப்போக உத்தேசித்தால். யாவரும் வந்து உள்ளத்தினுள்ளும்
நாவினுள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் 2நவின்று வணங்கு பொழில் சூழ் திருவாறன்விளையதனை
- எத்தனையேனும் உயர்ந்த ஞானத்தையுடையரான திருநாட்டிலுள்ளாரும் வந்து மனம் வாக்குக் காயம் என்னும்
இவற்றாலே பயின்று அடையும்படி எல்லையற்ற இனிய பொருளான திருவாறன்விளையை. மேவி வலஞ்செய்து -
அத்தலத்தை நான் சென்று அடைந்து அநுகூலமான கைங்கரியத்தைச் செய்து. கைதொழக் கூடுங்கொல் என்னும்
என் சிந்தனை - 3என் நெஞ்சு எனக்கு அடங்கியது அன்று; 4‘வேறு ஒன்றிலும்
என் மனம் செல்லுவது இல்லை,’ என்கிறபடியே.
(9)
771
சிந்தைமற்று ஒன்றின்
திறத்ததுஅல்
லாத்தன்மை
தேவபிரான் அறியும்
சிந்தையி
னால்செய்வ தானறி
யாதன மாயங்கள்
ஒன்றும்இல்லை
சிந்தையி
னால்சொல்லி னால்செய்கை
யால்நிலத்
தேவர் குழுவணங்கும்
சிந்தை மகிழ்திரு
வாறன்
விளையுறை
தீர்த்தனுக்கு அற்றபின்னே.
_______________________________________________________________
1. ‘தெளிவுசும்பு
ஏறலுற்றால்’ என்ன அமைந்திருக்க, ‘தீவினை உள்ளத்தின்
சார்வு அல்லவாகி’ என்று விசேடித்ததற்கு
பாவம் அருளிச்செய்கிறார்,
‘இங்கு இருந்த நாள்’ என்று தொடங்கி. சங்கோசம் - தீய வினைகளால்
கட்டுப்பட்டு ஞானம் குறைவுப்பட்டிருத்தல்.
2. நவின்று - கிட்டி.
3. ‘என் சிந்தனை’ என்பதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘என் நெஞ்சு’
என்று தொடங்கி.
4. இதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘வேறு ஒன்றிலும்’ என்று தொடங்கி.
இப்பொருளையுடைய சுலோகத்தை மேலே
காண்க.
|