New Page 1
414 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பொ - ரை :
‘பூதேவர்களான பாகவதர்களாலே சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் வணங்கப்படுகின்ற, சிந்தையை
மகிழச் செய்கின்ற திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற பரிசுத்தனான
சர்வேஸ்வரனுக்கே அடிமை என்று அறுதியிட்ட பின்பு, என் மனமானது வேறு ஒன்றினை உத்தேசியமாக நினைத்திராத
தன்மையைச் சர்வேஸ்வரன் அறிவான்; சிந்தையினால் நினைக்கப்படுவனவான வஞ்சனைகள் அவன் அறியாதன
ஒன்றும் இல்லை ஆதலால்,’ என்றவாறு.
வி - கு :
‘நிலத்தேவர் குழு, சிந்தையினார் சொல்லினால் செய்கையால் வணங்கும் திருவாறன்விளை’ என்க.
இதனால், மூன்று கரணங்களாலும் வணங்குதலைக் குறித்தபடி. குழு - கூட்டம், ‘திருவாறன் விளை உறை
தீர்த்தனுக்கு அற்ற பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாமை தேவபிரான் அறியும்’ என்க.
‘சிந்தையினால் செய்வ மாயங்கள் தான் அறியாதன ஒன்றும் இல்லை,’ என்க. நினைத்தலும் செய்கையோடு
ஒக்குமாதலின், ‘செய்வ’ என்கிறார்.
ஈடு :
பத்தாம் பாட்டு. 1‘இதுதான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு
பரமபதத்தை விரும்பினாலோ?’ என்ன, ‘அதனை. என் நினைவிற்கு வாய்த்தலையிலே இருக்கிற சர்வேஸ்வரனைக்
கேட்டுக்கொள்வது’ என்று இங்ஙனே அருளிச்செய்வர் சீயர். அன்றிக்கே, ‘நீர் திருவாறன்விளையை
பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் சுவதந்திரன் அல்லனோ? அவன் பரமபதத்தைத் தரிலோ?’
என்ன, ‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
3புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் அல்லனோ? புருஷன் விரும்பியதனையன்றோ
கொடுப்பது?
சிந்தை மற்று ஒன்றின்
திறத்தது அல்லாத் தன்மை தேவபிரான் அறியும் - நெஞ்சானது பரமபதம் என்று பேச்சுதன்னையும் நினையாதது
சர்வேஸ்வரன் அறியும். தன்மை - சுபாவம். பரமபதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு
விருப்பமின்மையின், ‘மற்று
________________________________________________________________
1. முன் இரண்டு அடிகளைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘அறியும்’ என்கையாலே ‘கேட்டுக்கொள்வது’ என்கிறார்.
வாய்த்தலை -
மூலம். ‘இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷியாக அவனைக் கேட்டுக்
கொள்ளுங்கோள்,’ என்பது
நஞ்சீயர் திருவுள்ளம்.
2. ‘அறிந்தாலோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘புருஷார்த்தத்தை’ என்று தொடங்கி.
|