பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன

பத்தாந்திருவாய்மொழி - பா. 10

415

ஒன்று’ என்கிறார். 1‘உம்மைக் கேட்கச் சர்வேஸ்வரனைச் சான்றாகச் சொல்லுவதற்குக் கருத்து என்?’ என்னில், சிந்தையினால் செய்வதான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை - 2அவன் நினைத்தால் இவன் பின்னர் நினைக்க வேண்டியிருக்க, அவன் அறியாதது உண்டோ? உள்ளுவார் உள்ளத்தெல்லாம் உடனிருந்து அறியுமவன் அன்றோ? 3அவன் நினைப்பிட்டால் அன்றோ இவனுக்கு நினைக்கலாவது? 4நெஞ்சால் செய்யப்படுவனவற்றில் அவன் அறியாத வஞ்சனங்கள் ஒன்றும் இல்லை.

    சிந்தையினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் - 5நித்தியசூரிகளைப் போன்று முழுக்ஷூக்களும் வந்து அடையும் படியான தேசமாயிற்று. மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றாலும் பூதேவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திரண்டு வந்து அடையும்படியான தேசமாயிற்று. சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை - 6திருவாறன்விளையிலே வந்து வசிக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக்கொள்வது.

______________________________________________________________

1. மேலே அருளிச்செய்த அவதாரிகை இரண்டனுள் முதல் அவதாரிகையைத்
  திருவுள்ளத்திலே கொண்டு அருளிச்செய்கிறார், ‘உம்மைக் கேட்க’ என்று
  தொடங்கி.

2. ‘அவன் அறியாதே இவன் நினைக்க ஒண்ணதோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அவன் நினைத்தால்’ என்று தொடங்கி அதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார், ‘உள்ளுவார்’ என்று தொடங்கி.

    ‘உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன் றில்லாக்
    கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
    உள்ளுவார் உள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி என்று
    வெள்கிப்போய் என்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.’

என்பது, திருமாலை, 34.

   
‘கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
     தெள்ளியே னாகி நின்று தேடினேன் நாடிக் கொண்டேன்
     உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதி என்று
     வெள்கினேன் வெள்கி நானும் விலவறச் சிரித்திட் டேனே.’

என்னும் அப்பர் தேவாரமும் இக்கருத்தே பற்றி வந்தது.

3. ‘அவன் நினைத்த பின்புதான் இவன் நினைக்க வேண்டுமோ?’ என்ன,
  ‘அவன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. பதப்பொருள் அருளிச்செய்கிறார், ‘நெஞ்சால்’ என்று தொடங்கி.

5. மேல் திருப்பாசுரத்தில் நித்தியசூரிகள் ஆஸ்ரயித்தபடி சொல்லி, இங்கு
  முமுக்ஷூக்கள் ஆஸ்ரயிக்கிறபடியைச் சொன்னதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘நித்தியசூரிகளைப் போன்று’ என்று தொடங்கி.

6. ‘பரமபதத்தை நினையாதிருக்கிற இவர், ‘தேவபிரான்’ என்று பரமபத
  நிலையினைச் சொல்லுவான் என்?’ என்கிற சங்கையிலே, ‘தேவபிரான்’
  என்றதற்கு அர்த்தம் அருளிச்செய்கிறார், ‘திருவாறன் விளையிலே’ என்று
  தொடங்கி.