1ய
416 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
1யாரேனுமாகப்
புக்காரை எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவர்களாகச் செய்யும் தேசம் ஆதலின், ‘சிந்தை, மகிழ்
திருவாறன் விளை’ என்கிறார். இதனால், பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி
இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி. ‘உமக்கு இத்தெளிவுதான் என்று தொடங்கி வந்தது?’ என்ன,
தீர்த்தனுக்கு அற்றபின் - அவன் தன்னுடைய இனிமையின் மிகுதியாலே எனக்குப் புறம்பு உண்டான பற்றைத்
தவிர்த்துத் தனக்கே அநந்யார்ஹனாம்படி செய்துகொண்ட அன்று தொடங்கி; 2உஜ்ஜீவிக்கப்
பண்ணின அன்று தொடங்கி; 3நடுவே உஜ்ஜீவியாதே கிடந்து போந்ததே பல காலம்.
(10)
772
தீர்த்தனுக்கு
அற்றபின் மற்றுஓர்
சரணில்லை
என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன
னாகிச்
செழுங்குரு
கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள்
ஆயிரத்துள் இவைபத்தும்
வல்லார்களைத்
தேவர்வைகல்
தீர்த்தங்
களேஎன்று பூசித்து
நல்கி யுரைப்பர்தம்
தேவியர்க்கே.
பொ-ரை :
‘தூயோனான சர்வேஸ்வரனுக்கே அடிமை,’ என்று அறுதியிட்ட பின்பு வேறு ஓர் உபாயம் இல்லை என்று நினைத்து,
அந்தச் சர்வேஸ்வரனுக்கே அறுதியிட்ட மனத்தையுடையவராகி, செழுமை பொருந்திய திருக்குருகூரில்
அவதரித்த ஸ்ரீசடகோபராலே சொல்லப்பட்ட ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும்
_______________________________________________________________
1. இன்னார் சிந்தை
என்னாமையாலே அருளிச்செய்கிறார், யாரேனுமாக’
என்று தொடங்கி. இதனால் பலித்த பொருளை
அருளிச்செய்கிறார்,
‘பிராப்பிய பூமி’ என்று தொடங்கி.
2. ‘உஜ்ஜீவிக்கப்
பண்ணின அன்று தொடங்கி’ என்றது, பிரணவத்தில்
நடுவெழுத்தின் பொருளை எனக்குத் தெளிவித்த
அன்று தொடங்கி
என்றபடி.
3. இதன்
மறுதலையால் போதருகின்ற பொருளை அருளிச்செய்கிறார், ‘நடுவே’
என்று தொடங்கி. ‘நடுவே’
என்றது, விசேஷ கடாட்சத்திற்கு முன்புள்ள
காலத்தை.
|