கற
பத்தாந்திருவாய்மொழி
-
பா. 11 |
417 |
கற்று வல்லவர்களைத் தேவர்கள்
எப்பொழுதும் பூசித்துத் தங்களுடைய தேவிமார்கட்கு ‘இவர்கள் பரிசுத்தர்கள்’ என்று விரும்பிச்
சொல்லா நிற்பார்கள்’ என்றவாறு.
வி - கு :
‘தேவர் தம் தேவியர்க்கு இவை பத்தும் வல்லார்களைப் பூசித்து நல்கித் தீர்த்தங்களே என்று
உரைப்பர்,’ என்க.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றவர்கள் அயர்வறும் அமரர்களுக்குச் சிலாகிக்கத்
தக்கவர்கள்,’ என்கிறார்.
தீர்த்தன் - இன்னார்க்குத்
தீர்த்தன் என்னாமையாலே தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.
2தீர்த்தமாவது, தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.
3தீர்த்தன் உலகளந்த சேவடியைப் பிரமன் விளக்க. அந்தத் தீர்த்தத்தைப் பரிசுத்தத்தின்
பொருட்டுச் சடையின் மத்தியில் தரித்தான் சிவன். 4‘ஆறு பொதி சடையோன்’ என்னக்கடவது
அன்றோ? ‘கங்காதரன்’ என்றே பெயர் அவனுக்கு. 6அந்தக் கங்கைக்கு அடியை
ஆராய்ந்து கொள்ளுகை அன்றோ இனி உள்ளது? ஆராய்ந்தவாறே அது அடிப்பட்டு இருக்குமே; 6கங்கை
போதரக் கால் நிமிர்த்தருளிய கண்ணன் அன்றோ?
______________________________________________________________
1. ஈற்றடியைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘‘தீர்த்தன்’
என்றால் பரிசுத்தன் என்னும் பொருளைக் காட்டுமே ஒழிய,
‘தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு
எல்லாம் பரிசுத்தத்தைக்
கொடுக்குமவன்’ என்னும் பொருளைக் காட்டுமோ?’ என்ன, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார், ‘தீர்த்தமாவது’ என்று தொடங்கி.
3. ‘அப்படித் தன்னைத்
தீண்டினாரையும் பரிசுத்தம் ஆக்கினானோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தீர்த்தன்’ என்று தொடங்கி.
4. அப்படித்
தரித்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘ஆறு பொதி
சடையோன்’ என்று தொடங்கி. இது,
திருவெழுகூற்றிருக்கை.
5. ‘கங்காதரன் என்ற
மாத்திரத்திலே அவன் திருவடி விளக்கின நீரைத்
தரித்தான் என்னுமது தோற்றுமோ?’ என்ன,
அதற்குக் காரணத்தை
விசாரித்துக்கொள்ள வேண்டும் என்னுமதனையும் அப்படி விசாரித்தால்
திருவடியிலே பிறந்ததாய் இருக்கும் என்னுமதனையும் அருளிச்செய்கிறார்,
‘அந்தக் கங்கைக்கு’
என்று தொடங்கி. ‘அடிப்பட்டிருக்குமே’ என்பதற்கு,
காரணமாயிருக்கும் என்பதும், திருவடியிலே
பட்டிருக்கும் என்பதும்
பொருள்.
6. ‘அங்கை யால்அடி மூன்றுநீர் ஏற்றுஅயன்
அலர்கொடு
தொழுதேத்தக்
கங்கை போதரக்
கால்நிமிர்த் தருளிய
கண்ணன்வந்
துறைகோயில்’
என்பது, பெரிய
திருமொழி, 4. 2 : 6.
|