பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அன

418

திருவாய்மொழி - ஏழாம் பத்து

அன்றிக்கே, தீர்த்தனுக்கு அற்றபின் - 1‘தன்னுடைய இனிமையின் மிகுதியாலே தன்னை ஒழிந்த விஷயங்களில் உண்டான ருசியைக் கழித்தவனுக்கு அற்ற பின்’ என்றுமாம். மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி - அவனை ஒழிய இரட்சகர் இலர் என்று தெளிந்தார் ஆயிற்று. தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி - 2புறம்பு உண்டான விஷயங்களிலே ருசியைப் போக்கினவனுக்கே அறுதியாக எழுதிக் கொடுத்த நெஞ்சினையுடையராய். 3‘உனை நினைந்து எள்கல் தந்த எந்தாய்’ என்றாரே மேல்: ‘மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்றும், ‘பரமாத்துமா விஷயத்தில் அன்புடையர் அன்னிய விஷயத்தில் அன்பிலர் ஆவர்,’ என்றும் சொல்லுகிறபடியே, தன் பக்கல நெஞ்சினை வைத்தால் பின்பு புறம் போக ஒட்டாதே அழகு; 4‘மனைப்பால், பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார்அத் தோள்,’ என்கிறபடியே, மனைப்பால் பேரின்பத்திலே கைகழிய ஒட்டாதே.

_______________________________________________________________

    ‘அண்ட கோளகைப் புறத்ததாய் அகிலமன் றளந்த
     புண்ட ரீகமென் பதத்திடைப் பிறந்துபூ மகனார்
     கொண்ட தீர்த்தமாய் அரன்கொளப் பகிரதன் கொணர
     மண்ட லத்துவந் தடைந்ததிம் மாநதி மைந்த!’

என்பது, கம்பராமாயணம், அகலிகைப்பட. 60.

1. ‘தீர்த்தனுக்கு’ என்ற பதத்திற்கு, ’இனியன்’ என்று வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார், ‘தன்னுடைய’ என்று தொடங்கி.

2. ‘இனியனானவனுக்கு’ என்றதனால் பலித்த பாவத்தை அருளிச்செய்கிறார்,
  ‘புறம்பு உண்டான’ என்று தொடங்கி.

3. புறம்பு உண்டான விஷயங்களிலே ருசியைப் போக்கினான் என்பதற்குப்
  பிரமாணங்கள் காட்டுகிறார், ‘உனைநினைந்து’ என்று தொடங்கி.

    ‘உனை நினைந்து’ என்பது, திருவாய். 2. 6 : 4.

    ‘மாற்பால்’ என்பது, மூன்றாந்திருவந். 14.

     
‘பரமாத்மநி யோரக்த: விரக்த; அபரமாத்மநி’ என்பது, பார்ஹஸ்
  பத்ய ஸ்மிருதி.

4. ‘அவனுடைய அழகு புறம் போக ஒட்டாது,’ என்னுமதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார். ‘மனைப்பால்’ என்று தொடங்கி. இது, இரண்டாந்திருவந். 42.