New Page 1
பத்தாந்திருவாய்மொழி
-
பா. 11 |
419 |
செழுங்குருகூர்ச்
சடகோபன் சொன்ன - 1அதற்கு அடியான ஜன்மபூமியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த. தீர்த்தங்கள்
ஆயிரம் - ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்கள் ஆயின. இவை பத்தும் வல்லார்களை - இந்தப்
பத்தைக் கற்க வல்லவர்களை. தேவர் தீர்த்தங்களே என்று தம் தேவியர்க்குப் பூசித்து நல்கி
உரைப்பர் - 3திருவடி, திருவனந்தாழ்வான், சேனை முதலியார் தொடக்கமானார், இவர்களை
‘நாள்தோறும் தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக்கொண்டு போந்து. தங்கள் மனைவிமார்களைச் சினேகித்துக்
கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள். நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே - 4மனைவிமார்களும்
தாங்களுமாக ஸ்ரீவைகுண்டநாதனுக்கு அடிமை செய்து, மனைவிமார்கள் எடுத்துக் கை நீட்டின பிரீதியின்
மிகுதியாலே ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளுமளவானவாறே, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துக்
கனக்கத் தங்கள் பிரபாவத்தைச் சொல்லும்படியாகப் பெறுவர். ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும்
தசையாகிறது, பகவத் விஷயத்தில் கைங்கரியம் செய்யும் போது எடுத்துக் கை நீட்டுகை அன்றோ?’
5‘சரம்ஸ்லோகம் இரட்சித்துக்கொண்ட அளவு போலே இருக்கும் அளவுகளிலே,’ என்றபடி.
‘பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றாற்போலே, அதற்கு ஒரு நியதி
இல்லை ஆதலின், ‘வைகலும் பூசித்து
________________________________________________________________
1. ‘அதற்கு அடியான என்றது,
‘புறம்பு உண்டான விஷயப் பிராவண்யம்
தவிரும்படி பிறந்த மன உறுதிக்கு அடியான’ என்றபடி.
2. ‘ஆயிரம் திருப்பாசுரங்களும்
தீர்த்தம் போன்று பரம பரிசுத்தமானவை,’
என்றபடி.
3. ‘தேவர் பூசித்து’ என்று
கூட்டிப் பொருளை அருளிச்செய்கிறார் ‘திருவடி’
என்று தொடங்கி.
4. ‘தேவியர்க்கு நல்கி
உரைப்பதற்குக் காரணம் என்?’ என்ன. அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘மனைவிமார்களும்’ என்று
தொடங்கி. ஓடம்
ஏற்றிக் கூலிகொள்ளுமளவாவது, ‘ஓடத்தில் ஏற்றின பின்பு நட்டாற்றில்
கூலி கேட்கில்
கொடாதிருக்க ஒண்ணாத நிலை’ என்றபடி. ‘தங்கள்’
என்றது, இதனைக் கற்றவர்களை.
5. ‘ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவானவாறே’ என்றதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘சரமஸ்லோகம்’
என்று தொடங்கி. என்றது, மிகமிக
இரகசியமாகப் பேணிக்கொண்டு போந்த சரமஸ்லோகத்தைத் திரௌபதி
குழல் முடிக்கைக்காக, வியாமோகத்தாலே அருச்சுனனுக்கு வெளியிட
வேண்டும்படியான அளவு போலே
இருக்கிற அளவுகளிலே’ என்றபடி.
|