New Page 1
42 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
போமாறுபோலேயாயிற்று,
பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய்விட்டது.
சுமடு - சும்மாடு. சரீரமாகிற சும்மாட்டைத் தந்தாய்.
வன் பரங்கள் எடுத்து
-1‘தகுதி இல்லாத விஷயத்திலே போனேன்’ என்றோ நான் இப்போது அஞ்சுகிறது? பொறுக்கலாமளவு
சுமை எடுத்ததாகில் நான் சுமவேனோ? வலிய பாரத்தைச் சுமத்தி-கனத்த சுமையைச் சுமத்தி. ஐவர்-அவர்கள்தாம்
ஒருவர் இருவராகில் நான் ஆற்றேனோ? திசை திசை வலித்து-இவர்கள் அனைவரும் ஒரு திக்கிலே போக
இழுத்தார்களாகில்தான் மெள்ளப் போகேனோ? எற்றுகின்றனர்-உடையவனாகிலன்றோ போக்குவிட்டு
நலிவது? வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம்
வழியே இழுத்துக்கொண்டுபோகத் தேடுமாறு போலேகாணும் இவையும். முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட
2மூர்த்தி-கடலை நெருக்கி அதில் அமுதத்தை வாங்கி, வேறு பிரயோஜனங்களை
விரும்புகிறவர்களுக்குங்கூடக் கொடுக்கக்கூடிய பெரிய தோள்களையுடையவனே! 3என்னுடைய
இந்திரியங்களைப் பாற அடித்துப் போகட்டு, கடல் கடைந்த போதை ஒப்பனையோடே கூடின வடிவினைக்
காட்ட வல்லையே!
(10)
கொண்ட மூர்த்திஓர்
மூவ ராய்க்குணங் கள்படைத்தளித்
துக்கெ டுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப்
புனற்பள்ளி அப்ப னுக்கே
தொண்டர் தொண்டர்
தொண்டர் தொண்டன் சடகோபன்
சொல்லா யிரத்துள்
இப்பத்தும்
கண்டு பாட வல்லார்
வினைபோம் கங்குலும் பகலே.
_____________________________________________________________________
1. ‘வன்பரங்கள்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘தகுதியில்லாத’
என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
‘பொறுக்கலாமளவு’
என்று தொடங்கி. சொற்பொருள் அருளிச்செய்கிறார், ‘வலிய’ என்று
தொடங்கி.
பாரத்தின் வன்மையை விளக்குகிறார், ‘கனத்த’ என்று
தொடங்கி, ‘பாரம்’ என்றது, ஐம்புலன்களை.
2. மூர்த்தி-வடிவு. ‘மூர்த்தி’ என்ற
சொல், உபலக்ஷணத்தால் தோள்களைக்
குறிக்கிறது.
3. ‘ஏற்றுகின்றனர்’
என்றதன் பாவத்தைக் கூட்டி, ‘மூர்த்தி’ என்றதற்கு
வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார், ‘என்னுடைய’
என்று தொடங்கி.
|