பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

வியாக்கியானத்தில் வந்துள்ள

ஐதிஹ்யங்கள்

    ஆண்டாள் ஒருநாள் ஆழ்வானுக்குப் ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்; இவ்விடையாட்டம் ஒன்றும் ஆராயாது இருக்கிறது என்?’ என்ன, ‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்த கரையச் சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக்கொள்ள அங்கே வரக் காட்டு,’ என்ன, பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க, ‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே!’ என்று திருவுள்ளமாக, ‘இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னாநின்றார்கள்,’ என்று விண்ணப்பம் செய்ய, ‘எல்லாம் செய்கிறோம்,’ என்று திருவுள்ளமானர்; பிற்றை நாளே மன்னியைக் கொடு வந்து கொடுத்தார்கள். ப. 52.

    அகளங்க பிரஹ்மராயர் அடையவளைந்தான் செய்யா நிற்கச் செய்தே மதிள் போக்குகைக்காக இளையாழ்வான் அகத்தை வாங்கப் புக, பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்வீர்; இங்குக் கிடக்கும் நான்கு குடிங்களுங்காணும் பெருமாளுக்குக் காவல்; ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிய! இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்று இராதே, பெருமாள் செய்விக்கிறார் என்று இரீர்; உமக்கு நல்வழி போக உடலாங்காணும்,’ என்று அருளிச்செய்தார். ப. 52.

   
அனந்தாழ்வான் தான் பெண் பிள்ளையை ‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான். பட்டர் பெருமாளிடத்தில் ‘அடியேனை ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும், நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே ‘அழகிய மணவாளப்பெருமாள்’ என்று நினைத்திருக்கவும் வேணும்,’ என்று வேண்டிக்கொண்டார். ப. 91.