பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

424

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுதுசெய்யாநிற்க, இப்பாட்டளவிலே வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே! என்னும்,’ என்று இயலைச் சேர்த்து அருளிச்செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீ ரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர் என்று அருளிச்செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைகிறது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சி இருந்தேன்’ என்று சீயர் அருளிச்செய்வர். ப. 92.

    நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கண்டு, ‘ஈஸ்வரனுக்குச் சொரூப வியாப்தியோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘பாஷ்யகாரர் தோற்ற அருளிச்செய்துகொண்டு போந்தது சொரூப வியாப்தியாய் இருக்கும்; ஆகிலும், எம்பார் ஒரு நாள், ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்ததற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோடே வியாபித்திருக்கும்,’ என்று அருளிச்செய்யக் கேட்டேன்,’ என்று பணித்தார். ப. 108.

    பிள்ளைதாம் பெருமாள் எழுந்தருளும் போது ‘எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பராம். நம் முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பர்கள். ப. 163.

    ‘பட்டர் இராமாவதாரத்தில் போர பக்ஷபதித்திருபர்,’ என்று அவர் அருளிச்செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள், ‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஓலைக் கட்டித் ‘தூது போ’ என்ன, தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே!’ என்ன, ‘அது அங்ஙன் அன்றுகாண்; கழுத்திலே ஓலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே தவிர்ந்தாரத்தனை காண்,’ என்று அருளிச்செய்தார். ப. 191.

   
ஆளவந்தார் ‘சிசுபாலன் பெற்றிலன்காண்’ என்று அருளிச்செய்வர்; ‘அது என்?’ என்னில், ‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே, நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தானத்தனைகாண்,’ என்று அருளிச்செய்வர். ப. 221.