New Page 1
‘அருச்சுனன் தான் எம்பெருமானைப்
பெற்றானோ, இல்லையோ?’ என்று நம்பிள்ளை சீயரைக் கேட்க, ‘உமக்கு அதுகொண்டு காரியம் என்?
இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில், பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில்,
தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்; பெற்றவர்களை
ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச்செய்தார்.
ப.
246.
அம்மங்கி அம்மாள்,
‘இத்திருவாய்மொழி பாடக் கேட்டு அனுபவித்துப் போருமிதற்கு மேற்பட, இதில் ஓடுகிற ஆர்த்திக்கு
நம்மாற்பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது என்று பணிக்கும்,’ என்று அருளிச்செய்வர்.
ப. 248.
நம்பி திருவழுதிநாடு
தாசர், ஸ்ரீ கீதை போவான் ஒருவன் சந்நியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு
அரிசியைக் கொடுப்பித்து விடுமத்தனை போக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி
கற்றவன் ஒரு விண்ணப்பம் செய்வான் சென்றால், சர்வேஸ்வரன் கிராமத்தில் உள்ளாரும் புறப்பட்டு
எதிர்கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியாநிற்பார்கள்,’ என்று
அருளிச்செய்வர்.
ப. 354.
திருப்புற்றுக்குக்
கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் படிக்கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளியிருக்க,
உடையவர் திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு ‘ஆம் முதல்வன் இவன்’ என்று
அருளிச்செய்தாராம்.
ப. 356.
|