வ
வியாக்கியானத்தில்
வந்துள்ள
உவமைகள்
சரணம் புக்கார் மேலே
வேல்காரரை ஏவித் துன்புறுத்தும் அருள் அற்றவரைப் போலே.
பக். 3.
உதங்கன் கிருஷ்ணன்
பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, பாண்டவர்களை
அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப்போமோ?’ என்றார்போலோ.
பக். 7.
முதலிகள் அடங்கலும்
அரக்கர்கள் வாயிலே கிடந்த பெருமாளைச் சரணம் புக்காற்போலே.
பக். 9.
புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை தாய்முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு
போலே.
பக். 10.
வி்டுநகம் கட்டுவாரை
‘நெகிழக் கட்டினாய்!’ என்று உறுக்கிக் கட்டுவிப்பாரைப் போலே.
பக். 12.
திரிசங்குவினுடைய
ஓலக்கம் கிளர்ந்தாற்போலே.
பக். 15.
கலகத்தில்
பள்ளிகள் போலே.
பக். 17.
ஸ்ரீ பிரஹ்லாதனைப்
பாம்புகள் கூடவிட்டுக் கட்டி நலிந்தாற்போலே.
பக். 18.
உன்னை அனுபவிக்க
வேணும் என்று போந்த பிராட்டியை மாயமானைக் காட்டிப் பிரித்து, ஒற்றைக்கண்ணன் ஒற்றைக்காதள்
இவர்கள் கைகளிலே காட்டிக்கொடுத்து, உன்னைக் கொண்டு அகன்றாற்போலே.
பக். 19.
மயிர் கழுவி
இருக்கிறவனைச் செவ்விப்பூச்சூடாமல் தடுப்பாரைப் போலே.
பக். 24.
‘கூட இருக்கில் கண்ணோட்டம்
பிறக்கும்,’ என்று கடக்கப் போவாரைப் போலே.
25.
ஒருவன்
சிறை இருக்க, தாயும் தந்தையும் உடன் பிறந்தார்களுமாய்க் கலியாணம் செய்யக் கண்டு தான் கூடப்பெறாதே
நோவு படுமாறு போலே.
பக். 28.
|