கூப
இரண்டாந்திருவாய்மொழி - முன்னுரை |
47 |
கூப்பிடுமத்தனை
அன்றோ?
1‘இப்படிக் கண்ணழிவற்றது பின்னையும் பலியாது ஒழிவான் என்?’ என்னில், அது பலியாநிற்க,
கிரமப் பிராப்தி பொறுக்காமாட்டாமல் படுகிறார்; 2ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும்
அவ்வருகான இவருடைய மிருதுத்தன்மையின் சொரூபம் இருக்கிறபடி. 3பிராட்டியைப் போலே
‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’ என்று இருக்கமாட்டார், ருசி அளவு இல்லாமையாலே. 4சம்சாரத்தினுடைய
தோஷத்தையும் நினைத்து, எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் நினைத்தால் ஆறி இருக்கப்
போகாதே அன்றோ? 5பகவத் விஷயம் அறியாத சம்சாரிகள் இவர்க்குக் கூட்டு அல்லர்;
பகவானுடைய பிரிவு அறிய வேண்டாத நித்தியசூரிகளும் இவரக்குக் கூட்டு அல்லர்; பிரிவில் நோவுபடுகைக்கு
இவர் ஒருவருமே உள்ளார்.
6பட்டர்,
இத்திருவாய்மொழி அருளிச்செய்யும் போதெல்லாம் ‘ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே அவருடைய
உள்ளக்கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?’ என்று திருமுடியிலே கையை வைத்துக்கொண்டிருப்பார்.
7அவனும்,
_____________________________________________________________________
1. ‘இப்படியிருக்கிற சரணாகதி,
பலத்தைத் தாராது ஒழிவான் என்?’ என்ற சங்கையை
அநுவதித்துப் பரிகரிக்கிறார்,
‘இப்படி’ என்று தொடங்கி.
2. பொறுக்கமாட்டாமைக்குரிய
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘ஈஸ்வரனுடைய’ என்று
தொடங்கி.
3. ‘ஆனால், பிராட்டியைப்
போன்ற தரித்திருக்க ஒண்ணாதோ?’ என்ன, ‘பிராட்டியைப்
போலே’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘தத் தஸ்ய
ஸத்ருஸம்பவேத்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 39;30.
4. ருசி அளவு இல்லாமையைக்
காரணம் கூறி விவரிக்கிறார், ‘சம்சாரத்தினுடைய’ என்று
தொடங்கி.
5. ‘இப்படி, பெறாமையாலே
நோவுபட்ட இவர்க்கு ஒப்பு ஆவார் இலர்,’ என்கிறார்,
‘பகவத்விஷயம்’ என்று தொடங்கி.
6. இப்படி இருக்கிற
இவருடைய ஆரித்தியைக் காட்டுகிற இத்திருவாய்மொழிக்குப்
பொருள், கரைமேலே நிற்கிற நம்
போன்றார் சொன்னால் சுவை இராது
என்பதனை ஆப்த வாக்கியத்தாலே காட்டுகிறார், ‘பட்டர்’ என்று
தொடங்கி.
7. ‘நன்று;
சர்வேஸ்வரன் தான் இவரை இங்கு வைத்திருப்பதற்குக் கருத்து என்?
என்ன, ‘அவனும்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
|