பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1

60

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1‘ஒரு நீர்ச்சாவியான பயிருக்கு ஒரு பாட்டம் மழை பெய்யக்கடவதன்றோ?’ என்கிறாள். 2‘தேவனே! அடைந்தவர்க்கு அருள் செய்பவனே! கேசவனே! அருள்புரிவாய்; அச்சுதனே! பார்வையாலே மறுபடியும் என்னைக் காப்பாயாக,’ என்னக் கடவதன்றோ’ என் தாமரைக் கண்ணா என்னும் - 3‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது; உணருகிற போது கண்களை வாய் வெருவிக்கொண்டாயிற்று உணர்ந்ததும். 4கிட்டின காலத்தில் ‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கன்றோ?’ என்றது கண்களாலே அன்றோ? அக்கண்களிலே அன்றோ இவள் எழுதிக்கொடுத்தது? 5கண்களாலே நோக்கி அணைக்கும் படியை நினைத்து, அந்த பாவனையின் மிகுதியாலே கலந்து பிரிந்தாற்போலே கண்ணீர் மல்க இருக்கும். என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய் என்னும் - 6‘என் தாபம் ஆறும்படி அவ்வலை ஏற்றிலே கொண்டபோய்ப் போகடவல்லீர்கோளே’

___________________________________________________________________

1. ‘தாமரைக் கண்ணா’ என்கிற தலைமகளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
  ‘ஒரு நீர்ச்சாவி’ என்று தொடங்கி. ஒரு நீர்ச்சாவி-ஒரு நீருக்காகப் பட்டுப் போகிற
  சாவி.

2. அவன் பார்வை வேண்டப்படுவது என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘தேவனே’
  என்று தொடங்கி. ‘அவலோகந தாநேந பூயோமாம் பாலய’ என்பது, ஸ்ரீவிஷ்ணு
  புரா. 1.20:16.

3. தளர்வதற்குக் காரணமும், தளர்ச்சி நீங்கித் தெளிவதற்குக் காரணமும் இக்கண்களே
  என்றுகொண்டு அருளிச்செய்கிறார், ‘தாமரைக் கண் என்றே தளரும் என்றது’
  என்று தொடங்கி. என்றது, மேல் திருப்பாசுரத்தில் ‘தளரும்’ என்று மோஹத்தைச்
  சொல்லி, இத்திருப்பாசுரத்தில் ‘என் தாமரைக்கண்ணா என்கையாலே, இது உணர்த்தியில்
  வார்த்தை என்றபடி. “தாமரைக்கண் என்றே தளரும்’ என்று தளர்த்திக்கு உடலானது
  இப்போது தாரகமாய்ச் சொல்லுகிறது. ‘நீர் ஏறுண்டார்க்கு அந்நீரைத் தெளித்து
  ஆஸ்வஸிப்பிக்குமாபோலே, எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என்
  ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ, இல்லையோ? கண்களாலே பிறர்க்கு ஆகாதபடி
  பண்ண அமையுமோ? ஸதார்சனத்தையும் பண்ணி வேண்டாவோ?’ என்பது
  இருபத்து நாலாயிரப்படி.

4. ‘என்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘கிட்டின காலத்தில்’ என்று தொடங்கி.

5. ‘என் தாமரைக் கண்ணா’ என்றதன் பின் கண்ணீர் மல்க இருக்கும்’ என்றதற்கு
  பாவம் அருளிச்செய்கிறார், ‘கண்களாலே’ என்று தொடங்கி.

6. ‘எறிநீர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘என் தாபம் ஆறும்படி’ என்று
  தொடங்கி. அலை ஏற்றிலே - எறியும் அலைகளிலே.