என
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
2 |
61 |
என்னும். 1‘திருப்பொருநலில்
தண்ணீர், பிரிந்தார்க்கு நிலாப்போலே சுடுகின்ற நீராய் இராநின்றது போலேகாணும். உன்னைக்
கிட்டுகைக்கு நான் செய்வது என்?’ என்பாள், ‘என்செய்கேன்’ என்கிறாள். 2அப்போதே
கிட்டப் பெறாமையாலே, ‘ஆசைப்பட்ட நாம் அழகியதாகப் பெற்றோம்’ என்று நெடுமூச்சு எறியாநிற்கும்
‘தளிர்களைத் தரித்திருக்கின்ற மரங்களைத் தன் மூச்சுக் காற்றினால் எரிக்கின்றவளைப் போல
இருக்கிறவளை’ பெருமூச்சாலே தன் பகை அறுக்கப் பாராநின்றாள். பல்லவங்களைத் தரித்தனவாயிருத்தல்
இப்போது இவளுக்குப் பகை அன்றோ? ஒரு படிப்பட நின்று நலிகிறபடி அன்றோ அவை? அரக்கியர்கள்
உறங்கும்போதும் உண்டே அன்றோ! உருவ இப்படியே நிற்கிற இத்தனை அவை, உருகும் - உருகுகிறபடியே நிற்குமத்தனை.
நெடுமூச்சு எறிகைக்குத் தர்மியும் இல்லையோ என்னும்படி உருகும். வெவ்விதாகப் பலகால் நெடுமூச்சு
எறிந்து, அந்த வெப்பத்தாலே உருகாநிற்கும்.
முன் செய்த வினையே முகப்படாய்
என்னும் - 4வலிக்கைக்கு விரகு பார்க்கிறபடி. ‘நான் முன்பு செய்ந பாவமே, என்
முன்னே வந்து நிற்க வல்லையே?’ என்னும். 5நீ முகங்காட்டினாயாகில். ‘தாமரைக்கண்ணா,
என் செய்கின்றாய்?’ என்று அவனைக் கேளாது ஒழியலாயிற்றே. என்றது, ‘நான் செய்த வினையின்
பயன் இதுவான
___________________________________________________________________
1. ‘இங்கே திருப்பொருநல்
நதி உண்டே?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘திருப்பொருநலில்’ என்று தொடங்கி.
2. ‘என் செய்கேன்’ என்றதன்
பின் ‘வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘அப்போதே’
என்று தொடங்கி.
3. வெப்பத்தோடு நெடுமூச்சு
எறிகிறதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘தளிர்களை’
என்று தொடங்கி.
‘தஹந் தீமிவ நிஸ்வானஸ:
வ்ருக்ஷாந் பல்லவ தாரிகை;’
என்பது, ஸ்ரீராமா. சுந். 17:29.
‘தஹந்தீம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘பெருமூச்சாலே’ என்று தொடங்கி. ‘பகை’ என்றது,
மரங்களை. பல்லவம் - தளிர்.
‘தாரிண:’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அரக்கியர்கள்’
என்று தொடங்கி.
4. ‘உருகுகிற சமயத்தில்
‘முன் செய்த வினையே முகப்படாய்’ என்கிறது என்?’ என்ன,
‘வலிக்கைக்கு’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். பதப்பொருள்
அருளிச்செய்கிறார், ‘நான் முன்பு’ என்று தொடங்கி.
5. ‘நான் முன்னே நின்றால் பெறுகிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘நீ முகங்காட்டினாயாகில்’
என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘நான்
செய்த’ என்று தொடங்கி.
|