ப
|
62 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
பின்பு நாம் யாரை வெறுப்பது?’
என்று இருக்கலாயிற்றே என்றபடி. 1ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் இவர்க்கும் உள்ளது ஒன்றாயிற்று;
‘நன்மை அவனாலே’ என்றும், ‘தீமை தந்தம்மாலே’ என்றுமாயிற்று இருப்பது.
2‘என்னுடைய பாவம் அதிகமாய் இருக்கிறது; சந்தேகம் இல்லை,’ என்றாள் அன்றோ? முகில்
வண்ணா தகுவதோ என்னும் - 3நான் செய்த பாவம் கிடக்கட்டும், கர்மங்கட்குத் தகுதியாகவோ
நீர் காரியம் செய்யுமது? தண்ணீர் என்றும் தரை என்றும் வேறுபாடு பாராமல் மழை பெய்வது போன்று,
திருவருள் செய்யும் உம்முடைய ஒளதார்ய குணத்துக்குப் போருமோ?’ என்னும். 4‘ஒரு வினைக்கு
இத்தனை உயிர் உண்டோ? நான்காண் இது விளைத்தேன்,’ என்று அவ்வடிவைக் கொண்டு வந்து காட்ட
வல்லையே’ என்னும். 5இது பத்தியின் காரியமேயாகிலும், பகவானுடைய அனுபவத்திற்கு
விரோதி ஆகையாலே பாவம் என்கிறது. 6விருப்பம் இல்லாததனைக் கொடுப்பது பாவம்
இத்தனை அன்றோ? 7‘தகவிதோ’ என்ற பாடத்திற்கு, ‘நான்
__________________________________________________________________
1. ‘அவன் வாராததற்குக்
காரணம் தன் பாவம் என்று சொன்ன பேர் உளரோ?’
என்ன, ‘ஸ்ரீ ஜனகராஜன்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
2. பிராட்டி அப்படிச்
சொன்னதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘என்னுடைய’ என்று
தொடங்கி.
‘மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்
மஹதஸ்தி ந ஸம்ஸய:’
என்பது, ஸ்ரீராமா. சுந். 38:48.
3. ‘நீ செய்த கர்மத்தின்
பலத்தை நீயே அனுபவிக்க வேண்டாவோ? ‘என் செய்கின்றாய்?
என்று என்னைக் கேட்கிறது என்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘நான் செய்த பாவம்’ என்று தொடங்கி.
4. ‘வினை’ என்றதனைக் கடாட்சித்து,
‘வண்ணம்’ என்பதற்கு, ‘வடிவு’ என்று வேறும்
ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘ஒரு வினைக்கு’ என்று
தொடங்கி.
5. ‘இந்த ஆற்றாமைக்கு அடி பத்தி
அன்றோ? அதனைப் பாவம் என்பான் என்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இது பத்தியின்’
என்று தொடங்கி.
6. ‘யாதாயினும் பிரேமத்தின்
பலமாய் வந்ததனைப் பாவம் என்னலாமோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘விருப்பமில்லாததனை’
என்று தொடங்கி.
7. ‘தகவிதோ’
என்ற பாடத்திற்கு, ‘உம்முடைய தகவுக்கு விஷயம் இது என்று
அருளிச்செய்யவேண்டும்,’ என்பது
பொருள். தகவு இது-தகவுக்கு இது விஷயம்.
ஓகாரம்: அசைநிலை.
|