New Page 1
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
2 |
63 |
செய்த பாவம் நானே
அனுபவிக்க வேணுமாகில் உம்முடைய திருவருளுக்கு விஷயம் இன்னது என்று அருளிச்செய்ய வேண்டும்,’ என்னும்.
1‘முன் செய்த வினையே முகப்படாய்’ என்கிற இடம், ‘கிரியை அத்ருஷ்ட ரூபத்தாலே
நின்று பலத்தைக் கொடுக்கும்’ என்பார் வார்த்தை. ‘முகில் வண்ணா’ என்கிற இடம்,
‘ஒரு பரம சேதனனுடைய திருவருளே பலத்தைக் கொடுப்பது’ என்றிருக்கும் வேதாந்திகள் வார்த்தை.
2‘குற்றவாளர் இராம கோஷ்டிக்கு ஆள் அல்லர்’ என்கிற மஹாராஜர் தொடக்கமானார்
வார்த்தை போன்றது மேலே சொன்னது: ‘அவர்கள் குற்றவாளரேயாகிலும்’ என்ற இராம சித்தாந்தம்
போலே ‘தகவிதோ’ என்கிறது. 4‘என்னை நமஸ்காரம் செய்’ என்றாற்போலே மேலே
சொன்னது; 5‘துக்கப்படாதே’ என்றாற்போலே ‘தகவிதோ’ என்கிறது.
‘முகில் வண்ணா’
என்கைக்கு, நம் ஒளதார்யம் எங்கே பலிக்கக் கண்டு சொல்லுகிறது?’ என்ன, ‘இவ்வுலகம் முன் செய்து
உண்டு உமிழ்ந்து அளந்தாய்-காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச்
செய்து ‘தகவிதோ’ என்கைக்கு ‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி
_________________________________________________________________
1, ‘முன் செய்த வினையே முகப்படாய்’
என்று, கர்மங்கள் பலத்தைத் தருவனவாகச்
சொன்னவிடம் பூர்வபக்ஷமாய், ‘முகில் வண்ணா தகவிதோ?’
என்று ஈஸ்வரன்
பலத்தைக் கொடுக்கிறவனாகச் சொன்னவிடம் சித்தாந்தமாயிருக்கிறது என்று
திருவுள்ளம்
பற்றி அருளிச்செய்கிறார், ‘முன் செய்த வினையே’ என்று தொடங்கி.
‘அத்ருஷ்ட ரூபத்தாலே பலம்
தரும்’ என்பார், பூர்வமீமாம்ஸகர். வேதாந்திகளாவார்,
வியாசர் முதலாயினோர்.
2. இந்தப் பூர்வபக்ஷ சித்தாந்தங்களுக்கு
முறையே இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார், ‘குற்றவாளர்’ என்று தொடங்கி.
என்றது. மஹாராஜர் வார்த்தையைப்
பூர்வபக்ஷமாக்கிப் பெருமாள், ‘அவர்கள் குற்றவாளரேயாகிலும்’
என்றதனைச்
சித்தாந்தமாக்கினாற்போலேயும், ‘என்னை நமஸ்காரம் செய்’ என்ற பத்தியைப்
பூர்வபக்ஷமாக்கித்
‘துக்கப்படாதே’ என்ற பிரபத்தியைச் சித்தாந்தமாக்கினாற்
போலேயும், இங்கும், ‘முன் செய்த
வினையே முகப்படாய்’ என்றதனைப்
பூர்வபக்ஷமாக்கி, ‘முகில் வண்ணா தகவிதோ?’ என்றதனைச் சித்தாந்தமாக்கினார்
என்றபடி.
3. ‘தோஷோயத்யபி தஸ்ய
ஸ்யாத்’ என்பது, ஸ்ரீராமா:யுத். 18:3. இங்குக் கம்பராமாயணம்
விபீடணன் அடைக்கலப்படலம், 107
முதல் 123 முடியவுள்ள செய்யுள்களைக் காணல்
தகும்.
4. ‘மாம் நமஸ்குரு’ என்பது
ஸ்ரீகீதை, 9:34.
5. ‘மாஸூச: என்பது,
ஸ்ரீகீதை, 18;66.
6. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘முகில் வண்ணா’ என்று தொடங்கி.
|