பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ந

இரண்டாந்திருவாய்மொழி - பா. 3

67

நிற்கும். 1‘மிகப் பெரிய ஆபத்தையடைந்தவன்’ என்கிற அதற்கும் அவ்வருகே அன்றோ இவளுடைய நிலை? அங்கு வந்து தோன்றக் காணாமையாலே, மையாக்கும் -மயங்காநின்றாள்; அறிவு கெடாநின்றாள்.

    2
‘மயங்கத் தீருமோ? விரோதி கனத்திருக்கில்?’ என்ன, உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனை என்னும் - 3‘நான் வரப்பார்த்தால் அதற்குத் தடை உண்டு அத்தனையல்லது, நீயே வரப் பார்த்தால் தடை செய்வார் உளரோ? 4எதிரிகள் மிடுக்கருமாய்ப் பலருமாமத்தனை அன்றோ வேண்டுவது அழியச் செய்கைக்கு?’ உட்கு -மிடுக்கு. ‘பிறகு அவனுடைய உள்ளத்தில் இருந்துகொண்டிருக்கிற 5பகவான், கோபமுடையவராய், அதிசோஷணம் என்ற அந்தக் காற்றினை விழுங்கிவிட்டார்; அந்தக் காற்று நாசமடைந்தது’ என்னுமாறு போன்று, ‘உண்ட’ என்கிறது. 6வடிவழகிற்கு ஒப்பு உண்டாகிலும் வீரத்துக்கு ஒப்புச் சொல்ல

____________________________________________________________________

1. ‘ஆயின், ஸ்ரீ கஜேந்திராழ்வானைப் போலே இவளுக்கு ஆபத்து உண்டோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மிகப்பெரிய’ என்று தொடங்கி.

        ‘பரமாப்தம் ஆபந்ந;’ என்பது, விஷ்ணு தர்மம், 68.

2. ‘மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘மயங்க’ என்று தொடங்கி.

3. ‘அசுரர் உயிர் எல்லாம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், நான் வர’ என்று
  தொடங்கி.

4. ‘உட்குடை’ என்றும், ‘அசுரர்’ என்றும் சொன்னதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘எதிரிகள்’ என்று தொடங்கி.

5. ‘போக்கினான்’ என்னாமல், ‘உண்ட’ என்றதற்குப் பிரமாணம் ‘பகவான்’ என்று
  தொடங்குவது.

        ‘ஹ்ருதயஸ்த: தத: தஸ்ய தம் வாயும் அதிஸோஷணம்
        பபௌ ஜநார்த்ததா: க்ருத்த: ஸ யயௌ பவந: க்ஷயம்’

என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1.19:24.

        ‘உண்டற் குரிய வல்லாப் பொருளை
        உண்டன போலக் கூறலும் மரபே’

என்ற விதி இங்கு நினைத்தல் தகும். (தொல். பொ.)

6. ‘மணிவண்ணா’ என்றதனைக் கடாட்சித்து, பாவம் அருளிச்செய்கிறார், ‘வடிவழகிற்கு’
  என்று தொடங்கி.